பிரித்தானிய பாதுகாப்புத்துறைக்கு நிதி ஆதரவை உருவாக்க வங்கிகள், முதலீட்டாளர்கள் ஆலோசனை
பிரித்தானிய பாதுகாப்புத்துறைக்கு நிதி ஆதரவை உருவாக்க வங்கிகள், முதலீட்டாளர்கள் ஆலோசனை நடத்தின.
பிரித்தானியாவின் நிதி மற்றும் பாதுகாப்புத் துறையின் முன்னணி வர்த்தக அமைப்புகள், பாதுகாப்புத் துறைக்கு அதிகமான முதலீடு மற்றும் கடன் நிதியை ஈர்க்க தேவையான பொலிசி மாற்றங்கள் குறித்து ஆலோசனை நடத்தின.
TheCityUK, UK Finance, ADS Group ஆகிய அமைப்புகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டன.
ரஷ்யா-உக்ரைன் போர், அமெரிக்க பாதுகாப்பு உறுதிப்பாட்டின் குறைபாடு ஆகிய காரணங்களால் ஐரோப்பிய நாடுகள் தாக்குப்பிடிக்க, ஆயுதமயமாக்கல் செய்கின்ற சூழலில் பிரித்தானியாவின் பாதுகாப்புத்துறைக்கு நிதி ஆதரவை அதிகரிக்க இந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
இந்த கூட்டத்தில் முதலீட்டாளர்கள், வங்கிகள் பாதுகாப்பு நிறுவனங்களை ஆதரிக்க எவ்வாறு உதவலாம் என்பதற்கான சீர்திருத்தக் கோரிக்கைகள் ஆராயப்பட்டன.
பிரித்தானியாவின் தொழில்துறை அமைச்சர் ஜொனாதன் ரெனால்ட்ஸுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள பரிந்துரைகளில்,
- வங்கிகள் கடன் வழங்கும் போது தகவல் பகிர்வதை எளிதாக்குதல்
- பாதுகாப்புத் துறையில் சிறிய நிறுவனங்களுக்கு விரைவான செலுத்தும் முறைகள்
- முதலீட்டுப் போக்கில் பாதுகாப்பு துறை ESG (Environmental, Social, Governance) வரம்புகளுடன் ஒத்துப்போகும் என்பதை தெளிவுபடுத்துதல் ஆகியவை அடங்கும்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump), உக்ரைனுக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகளை நிறுத்தி வைத்துள்ளார்.
மேலும், நேட்டோ உறுப்பு நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK finance, defence trade bodies meeting