அக்டோபர் 2024-ல் பிரித்தானியாவில் ஏற்படவுள்ள நிதி மாற்றங்கள்
அக்டோபர் 2024 முதல், பிரித்தானிய குடும்பங்கள் பல முக்கியமான நிதி மாற்றங்களை எதிர்கொள்ளப் போகின்றன.
இந்த மாற்றங்களில் மின் கட்டண உயர்வு, மொபைல் ரோமிங் விதிகளில் மாற்றங்கள், ராயல் மெயில் அஞ்சல் மதிப்புரைகள் ஆகியவை அடங்கும்.
மின்சார கட்டணம்
அக்டோபர் 2024 முதல், பிரித்தானியாவில் மின்சார கட்டணங்கள் 10 சதவீதம் அதிகரிக்கின்றன.
பிரித்தானியாவின் இண்டஸ்ட்ரி ரெகுலேட்டரால் நிர்ணயிக்கப்பட்ட Energy Price Cap அதிகரிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம்.
இதனால், சராசரி குடும்பத்தின் ஆண்டு மின்கட்டணம் £1,717 ஆக உயர்ந்துள்ளது. இது முன்னர் £1,568 ஆக இருந்தது.
Winter Fuel Payments
வறுமையில் உள்ளோருக்கு Warm Home Discount Scheme என்ற திட்டம் அக்டோபரில் மீண்டும் தொடங்க உள்ளது. இதன் மூலம், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மின் கட்டணத்தில் £150 மானியம் வழங்கப்படும்.
புலம்பெயர்வை கட்டுப்படுத்தும் பிரித்தானியா., வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளை குறைக்க நடவடிக்கை
மொபைல் ரோமிங் விதிகள்
அக்டோபர் 1 முதல், மொபைல் ரோமிங் தொடர்பான புதிய விதிகள் அமுலுக்கு வரும். இதன்படி, பயணத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு செலவுகள் குறித்த தெளிவான தகவல்கள் வழங்கப்படும்.
ராயல் மெயில் அஞ்சல் stamp
அக்டோபர் 7 முதல், ராயல் மெயிலின் முதல் தர அஞ்சல் stamp 22 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது.
இதன் விலை £1.35-ல் இருந்து £1.65 ஆக உயர்கிறது. ராயல் மெயிலின் நிக் லாண்டன், அஞ்சல் எண்ணிக்கைகள் குறைந்ததற்காக, அஞ்சல் சேவை செலவுகள் அதிகரித்துவிட்டதாக விளக்கினார்.
போக்குவரத்து மோசடி சட்டம்
2024 அக்டோபர் 7 முதல், புதிய மோசடி எதிர்ப்பு விதிகள் அமுலுக்கு வர உள்ளன.
Payment Systems Regulator எனப்படும் கட்டண அமைப்புகள் ஒழுங்கு அமைப்பின் கீழ், வங்கிகள் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 85,000 பவுண்டுகள் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம்
இதே அக்டோபரில், தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) 2024-ஆம் ஆண்டின் பணவீக்கத் தரவுகளை வெளியிட உள்ளது. தற்போதைய பணவீக்க விகிதம் 2.2 சதவீதமாக இருக்கும் நிலையில், 2022 அக்டோபரில் இது 11.1 சதவீதம் என உச்சத்தில் இருந்தது.
அரசு பட்ஜெட்
அக்டோபர் 30 அன்று, தொழிலாளர் கட்சியின் முதல் பட்ஜெட்டை Chancellor ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) வெளியிட உள்ளார். வரி மற்றும் செலவுகள் குறித்து கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த அக்டோபரில் நிகழக்கூடிய பொருளாதார மாற்றங்கள் பிரித்தானிய மக்கள் வாழ்வியல் செலவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK financial changes coming in October 2024, United Kingdom Financial Changes in October 2024, UK Financial Budget