பிரித்தானிய வான்வழி மூடல் - அனைத்து இங்கிலாந்து விமானங்களும் தரையிறக்கம்
பிரித்தானியாவின் விமான போக்குவரத்திற்கு இன்று (புதன்கிழமை) ஒரு தொழில்நுட்ப கோளாறு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த கோளாறு காரணமாக, லண்டனில் இருந்து வெளியேறும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக தரையிறங்கச் செய்யும் நிலை உருவானது.
பிரித்தானிய தேசிய விமான போக்குவரத்து சேவை (NATS), இந்த தொழில்நுட்பக் கோளாறு லண்டனின் தெற்குப் பகுதியில் உள்ள Swanwick கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்டதாகவும், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விமானங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
லண்டன் கேட்விக் விமான நிலையம் உள்ளிட்ட பல முக்கிய விமான நிலையங்களில் புறப்படவிருந்த விமானங்கள் தடைசெய்யப்பட்டன. சில உள்ளே வரும் விமானங்கள் மாற்று வழிவழியாக திருப்பிவிடப்பட்டன.
ஸ்டான்ஸ்டெட் விமான நிலையம், ஹீத்ரோ, லூட்டன், சிட்டி மற்றும் சவுத்தெண்ட் ஆகிய லண்டன் விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டன.
20 நிமிடங்களுக்குப் பிறகு NATS வெளியிட்ட புதுப்பிப்பு தகவலில், "பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளது" எனவும், "சாதாரண சேவைக்கு முந்தைய நிலையை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன" எனவும் தெரிவித்தது.
இந்தச் சம்பவம் NATS அமைப்பு 2002-ல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக சந்தித்து வரும் தொழில்நுட்பச் சிக்கல்களில் ஒன்றாகும். 2023 ஆகஸ்ட்டிலும் ஒரு மென்பொருள் கோளாறு காரணமாக மாணுவ முறையில் பிளான்கள் கையால் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் 700,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK airspace shutdown, NATS system failure, UK flight delays today, London Gatwick disruption, Stansted airport issue, Heathrow flight news, UK air traffic glitch, NATS Swanwick technical fault, Outbound UK flights stopped, UK airport technical issue