பார்ட்டிகேட் விவகாரம்: பிரித்தானியாவில் எம்.பி பதவியில் போரிஸ் ஜான்சன் விலகல்
முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர்(எம்.பி) பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
போரிஸ் ஜான்சன் ராஜினாமா
கொரோனா ஊரடங்கு காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, உக்ஸ்பிரிட்ஜ்(Uxbridge) மற்றும் தெற்கு ரூயிஸ்லிப்(South Ruislip) பகுதிகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்(எம்.பி) பதவியை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார்.
பார்ட்டிகேட் விவகாரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்(எம்.பி) போரிஸ் பொய் சொன்னாரா என்பதை விசாரிக்கும் குழுவிடம் இருந்து கடிதம் வந்து இருப்பதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
Reuters
அதில், எனக்கு எதிரான நடவடிக்கையை பயன்படுத்தி அவர்கள் என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
போரிஸ் ஜான்சன் தன்னுடைய எம்.பி பதவிகளை ராஜினாமா செய்து இருப்பதன் மூலம் அந்த பகுதிகள் உடனடியாக இடைத் தேர்தல் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
போரிஸ் ஜான்சன் அறிக்கை
எனது சிறப்பான தொகுதியில் இருந்து வெளியேறுவதற்கு நான் மிகவும் வருந்துகிறேன், தங்களுக்கு மேயர் மற்றும் எம்.பியாக சேவை புரிந்தது மிகப்பெரிய கவுரவம் என போரிஸ் ஜான்சன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Boris Johnson has served our country and his constituency with distinction. He led world in supporting Ukraine, got Brexit done, and was our most electorally successful Prime Minister since Margaret Thatcher. Boris is a political titan whose legacy will stand the test of time. pic.twitter.com/88OQcy8K0t
— Priti Patel MP (@pritipatel) June 9, 2023
அத்துடன் இன்று உக்ஸ்பிரிட்ஜ் மற்றும் தெற்கு ரூயிஸ்லிப் பகுதியில் உள்ள தன்னுடைய சங்கத்திற்கு, தான் எம்.பி பதவியை ராஜினாமா செய்து இருப்பதாகவும், உடனடியாக இடைத் தேர்தலை தூண்ட தயாராக இருப்பதாகவும் கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நான் பிரித்தானிய பிரதமராக இருந்த போது சாதித்த அனைத்து நிகழ்வுகளையும் நினைத்து பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.