செப்டம்பரில் பிரித்தானிய அரசு வாங்கியுள்ள பல பில்லியன் கடன்
பிரித்தானிய அரசின் செப்டம்பர் மாத கடன் 16.6 பில்லியன் பவுண்டுகள் (21.6 பில்லியன் டொலர்கள்) என பதிவாகியுள்ளது.
இது எதிர்பார்த்ததை விட குறைவான கடன் தொகை என்றாலும், பிரித்தானிய அரசின் கடன் வரலாற்றில் இது மூன்றாவது பாரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய அரசு செப்டம்பரில் 17.5 பில்லியன் பவுண்டுகள் வரை கடன் வாங்கும் என ராய்ட்டர்ஸ் மேற்கொண்ட ஆய்வில், பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர்.
1993 ஜனவரியில் பதிவுகள் தொடங்கியதில் இருந்து 2024 செப்டம்பர் மாதத்தில் மூன்றாவது மிக உயர்ந்த எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, செலவினங்களுக்கும் வரி வருவாய்க்கும் இடையிலான வேறுபாட்டின் அடிப்படையில் இந்த கடன் தோகை 16.6 பில்லியன் பவுண்டுகளை எட்டியதாகக் காட்டுகின்றன.
இந்த எண்ணிக்கை 2023 செப்டம்பரை விட 2.1 பில்லியன் பவுண்டுகள் அதிகம் என்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் பட்ஜெட் அறைவிக்கப்படவுள்ள நிலையில், பொது நிதி புள்ளிவிவரங்களின் கடைசி உத்தியோகபூர்வ தொகுப்பாகும். அதன்பிறகு, கருவூலம் அதன் கடன் விதிகளை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |