வெளிநாட்டு மாணவர்களுக்கான GREAT Scholarship 2026 திட்டத்தை அறிவித்த பிரித்தானியா
பிரித்தானிய அரசு மற்றும் British Council இணைந்து, வெளிநாட்டு மாணவர்களுக்கான GREAT Scholarship 2026-27 திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், 12 முன்னணி பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் தலா குறைந்தபட்சம் 10,000 பவுண்டு மதிப்பிலான உதவித்தொகையை வழங்க உள்ளன.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இந்த scholarship, ஒரு வருட postgraduate courses-க்கு மட்டுமே பொருந்தும்.
சட்டம், பொறியியல், கலை, இசை, மேலாண்மை, வடிவமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
scholarship தொகை நேரடியாக கட்டணத்தில் கழிக்கப்படும்.
சில பல்கலைக்கழகங்கள் 10,000 பவுண்டுகளுக்கு அதிகமாக வழங்கும் வாய்ப்பு உள்ளது.
தகுதி நிபந்தனைகள்
பிரித்தானியாவில் postgraduate course-க்கு தேவையான undergraduate degree பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் திறன் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
அறிவியல் திறன், ஆர்வம், மற்றும் தொடர்புடைய துறையில் அனுபவம் இருப்பதைக் காட்ட வேண்டும்.
Scholarship பெற்ற மாணவர்கள், பிரித்தானிய கல்வி தூதராக செயல்பட்டு, British Council நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
GREAT Scholarship அதிகாரப்பூர்வ பக்கத்தில், விருப்பமான பல்கலைக்கழகத்தை தெரிவு செய்ய வேண்டும்.
அந்த பல்கலைக்கழகத்தின் scholarship webpage-இல் தகுதியுடைய பாடத்திட்டங்கள் மற்றும் காலக்கெடுவை பார்க்க வேண்டும்.
படிப்பிற்கும் (course) உதவித்தொகைக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
பல்கலைக்கழகம் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு நேரடியாக தகவல் வழங்கும்.
உதவித்தொகை வழங்கும் வழங்கும் கடைசி திகதி ஜூன் 30, 2026.
பங்கேற்கும் பல்கலைக்கழகங்கள்
Anglia Ruskin University, Norwich University of the Arts, Queen’s University Belfast, Royal College of Art, Royal Conservatoire of Scotland, Royal Northern College of Music, University of Bristol, Trinity Laban, University of Dundee, University of Reading, University of Surrey, UWE Bristol ஆகியவை இதில் அடங்கும்.
இந்த GREAT Scholarship திட்டம், வெளிநாட்டு மாணவர்களுக்கு உலகத் தரமான கல்வியை குறைந்த செலவில் பெறும் வாய்ப்பை வழங்குகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK GREAT Scholarships 2026, Study in UK Rs 10 lakh funding postgraduate, British Council GREAT Scholarship eligibility India, Anglia Ruskin University GREAT Scholarship 2026, University of Bristol 13,000 Pounds scholarship details, UK postgraduate courses law engineering arts design, Indian students UK scholarships application deadline 2026, GREAT Britain Campaign higher education funding India, UK universities scholarships for Indian masters study, International students UK GREAT Scholarship program