100 பில்லியனை எட்டிய பிரித்தானியாவின் பசுமை பொருளாதாரம்
பிரித்தானியாவின் பசுமை பொருளாதாரம் (Green Economy) தற்போது ஆண்டுக்கு 100 பில்லியன் பவுண்டு மதிப்பை எட்டியுள்ளது.
இதனால் நாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
CBI Economics மற்றும் Energy and Climate Intelligence Unit (ECIU) இணைந்து வெளியிட்ட ஆய்வின் படி, சூரிய பலகை நிறுவல், வீட்டு உள்வெப்பக் கட்டுப்பாடு, காற்றாலை உற்பத்தி, மின்சார வாகனங்கள் போன்ற துறைகளில் நேரடியாக 3 லட்சம் பேர் வேலை செய்கின்றனர்.

இதனுடன் தொடர்புடைய விநியோக சங்கிலிகள் மற்றும் சேவைகள் சேர்ந்து 1.1 மில்லியன் வேலைகளை உருவாக்கியுள்ளன.
பசுமை பொருளாதாரத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சராசரியாக 43,000 பவுண்டு சம்பளம் பெறுகின்றனர். இது தேசிய சராசரியை விட ௧௧ சதவீதம் அதிகம்.
ஒவ்வொரு ஊழியரும் நாட்டின் பொருளாதாரத்திற்கு வருடத்திற்கு சுமார் 120,000 பவுண்டு மதிப்பைச் சேர்க்கின்றனர்.
2030-க்குள் நாட்டின் மின்சாரத்தை முழுமையாக கார்பன் குறைவாக்கும் இலக்கு மற்றும் 2050-க்குள் Net Zero அடையும் திட்டம் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
ஆய்வில், பசுமை ஆற்றல் துறையில் 455 பில்லியன் பவுண்டு முதலீடு வரப்போகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிரித்தானியாவின் எதிர்கால போட்டித்திறனை வலுப்படுத்தும்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், Net Zero இலக்குகளை கைவிடுவது நாட்டின் பொருளாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கின்றனர்.
Fossil fuel துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், பசுமை பொருளாதாரம் பிரித்தானியாவின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |