AC வாங்கும் பிரித்தானியர்கள்., நிபுணர்கள் எச்சரிக்கை
வெப்ப அலையால் பிரித்தானியாவில் AC தேவை அதிகரித்துள்ள நிலையில், மக்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2026-ஆம் ஆண்டின் இரண்டாவது வெப்ப அலைக்குப் பிறகு, லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் ஏர் கண்டிஷன் (AC) வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
தற்போது பிரித்தானியாவில் சுமார் 5 வீடுகளில்தான் AC உள்ளது. ஆனால், கோடைக்காலத்தில் பாதி வீடுகள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றன என 2025-ஆம் ஆண்டின் Centre for British Progress அறிக்கை கூறுகிறது.
AC நிறுவுநர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதிக ஆர்டர்களால் பிஸியாக உள்ளனர். Portable AC-கள் ஓன்லைன் விற்பனை தளங்களில் விரைவாக விற்று தீர்ந்துவிட்டன.

லண்டனில் வசிக்கும் குடும்பம் ஒன்று, வெப்ப அலைக்குப் பிறகு தங்கள் வீட்டில் மேல்தளத்திற்கும் AC பொருத்தியுள்ளனர். இப்போது AC இல்லாமல் வாழ முடியாது என அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், நிலைத்தன்மை நிபுணர்கள் AC பயன்பாட்டை எச்சரிக்கின்றனர். Oxford Brookes பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜத் குப்தா, “AC அதிக மின்சாரத்தை உபயோகிக்கும், கார்பன் உமிழ்வை அதிகரிக்கும், மேலும் நகர தெருக்களில் சூடான காற்றை வெளியிடுவதன் மூலம் நகர்ப்புற வெப்ப தீவு விளைவு (urban heat island effect) என்னு நிலையை மோசமாக்கும்” என தெரிவித்துள்ளார்.
லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் விரிவுரையாளர் ஜான் கலாவுடிட், “பிரித்தானிய வீடுகள் வெப்பத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இயற்கை காற்றோட்டம், நிழல் ஏற்படுத்தும் பொருட்கள் போன்ற எளிய தீர்வுகளை முதலில் பயன்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.
“AC-ஐ அவசியமான இடங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். புதிய கட்டிடங்களில், இயற்கை குளிர்ச்சி ஏற்படும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட வேண்டும்” என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |