புலம்பெயர்ந்தோரை பாதுகாக்க தவறிய உள்துறை அலுவலகம்: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தன்னைத்தான் மாய்த்துக்கொள்ளும் மன நிலைமையிலும், மன நலன் பாதிக்கப்பட்ட நிலையிலும் இருக்கும் புலம்பெயர்ந்தோரை பாதுகாக்க பிரித்தானிய உள்துறை அலுவலகம் தவறிவிட்டதாக பிரித்தானிய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புலம்பெயர்ந்தோரை பாதுகாக்க தவறிய உள்துறை அலுவலகம்
எகிப்து மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த இரண்டு புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாவலர்கள் அவர்களைத் துன்புறுத்தியதை தொலைக்காட்சி ஒன்று ரகசியமாக படம் பிடித்துள்ளது.

அவர்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், பிரித்தானிய உள்துறை அலுவலகம் அவர்களை பாதுகாக்கத் தவறிவிட்டதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியான Mrs Justice Jefford, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்தின் 3ஆவது பிரிவின்படி, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரை மனிதத்தன்மையின்றி மற்றும் மோசமாக நடத்தப்படுதலிலிருந்து காப்பாற்ற, பிரித்தானிய உள்துறை அலுவலகம் தவறிவிட்டதாக தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |