உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்கு பதிலடி! பிரித்தானியா முக்கிய அறிவிப்பு
உக்ரைன் போருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யன் விமானத்துறை மீது புதிய தடைகள் விதிப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் புதிய தடைகளின் படி, ரஷ்யாவின் 3 விமான நிறுவனங்களான ஏரோஃப்ளோட், யூரல் ஏர்லைன்ஸ் மற்றும் ரோசியா ஏர்லைன்ஸ், பிரித்தானியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் அவர்களுக்கு சொந்தமாக இருக்கும் தரையிறங்கும் தளங்களை விற்க முடியாது.
இந்த தரையிறங்கும் தளங்களின் மதிப்பு 50 மில்லியன் பவுண்டு என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
நாங்கள் ஏற்கனவே எங்கள் வான்வெளியை ரஷ்யன் விமான நிறுவனங்களுக்கு மூடிவிட்டோம்.
உக்ரைன் மீது புடின் தனது மிருகத்தனமான தாக்குதல்களை தொடரும் வரை, நாங்கள் தொடர்ந்து ரஷ்யாவின் பொருளாதாரத்தை குறிவைப்போம் என பிரித்தானிாய வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ் கூறினார்.
ரஷ்யா மீது ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள பல்வேறு பொருளாதார தடைகள், புடின் மற்றும் அவரது போர் இயந்திரத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மன் பள்ளியில் ஆயுதமேந்திய மர்ம நபர் தாக்குதல்! வெளியான புகைப்படம்
பாகங்கள் பற்றாக்குறையால் ரஷ்யாவில் இருக்கும் பல ஆயுதங்கள் தயாரிப்பாளர்கள், தங்களின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு நிறுவனத்தின் செயல்திறன் தடைப்பட்டுள்ளது, ட்ரோன்கள் உட்பட மேம்பட்ட தொழில்நுட்பத்தை மாற்றுவதற்கான ரஷ்யாவின் செயல்பாடுகள் தடைப்பட்டுள்ளது.
பாகங்கள் பற்றாக்குறையால் ரஷ்யாவின் உள்ளூர் வாகன விற்பனை 80% சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.