கலவரத்துக்கு மத்தியில் பிரான்ஸுக்கு பயணிக்கும் பிரித்தானியர்கள்: பிரித்தானிய அரசு வழங்கியுள்ள முக்கிய அறிவுரை
17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு வெடித்துள்ள கலவரத்தை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் பிரித்தானிய பயணிகளுக்கு அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் முக்கிய அறிவுரைகள் வழங்கியுள்ளது.
17 வயது சிறுவன் சுட்டுக் கொலை
பாரிஸின் புறநகர் பகுதியான நாண்டெர்ரே-வில் 17 வயது சிறுவன் பொலிஸார் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் கலவரம் மிகப்பெரிய அளவில் வெடித்து வருகிறது.
நான்கு நாட்களாக போராட்டம் தொடரும் நிலையில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்னும் நாட்டில் அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்காமல் உள்ளார்.
The absolute state of France.
— Paul Golding (@GoldingBF) June 30, 2023
Import the Third World, become the Third World. #FranceRiots pic.twitter.com/OapCbkuFoQ
நாட்டின் பெரும்பாலான இடங்களில் கலவரம் பரவிய நிலையில், பள்ளிக்கூடங்கள், பொது இடங்கள், பேருந்துகள் மற்றும் கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது.
பிரித்தானிய பயணிகளுக்கு அறிவுரை
இந்நிலையில் கலவரம் தீவிரமாக வெடித்து வரும் பிரான்ஸுக்கு பயணம் செய்ய இருக்கும் பிரித்தானிய பயணிகளுக்கு பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் முக்கிய அறிவுரைகள் தெரிவித்துள்ளது.
AP
அதனடிப்படையில், பயணத்தில் இடையூறுகள் ஏற்படலாம், உள்ளூர் போக்குவரத்து சேவைகள் குறைக்கப்படலாம், உள்ளூர் அதிகாரிகள் சிலர் ஊரடங்கு அறிவிப்புகளை அறிவிக்கலாம், மற்றும் கலவரம் நடைபெறும் இடமும் நேரமும் ஊகிக்க முடியாததாக இருக்கலாம் எனவும் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
அத்துடன் பிரான்ஸ் நாட்டில் கலவரத்துடன் இணைக்கப்பட்ட நிகழ்வுகளில் பிரித்தானியர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், வேறு கூட்டங்களில் கலந்து கொண்ட பிரித்தானியர்களும் எந்த நேரமும் விழிப்புடன் இருக்கவும், தொல்லைகளில் இருந்து விலகி செல்லவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
AP
மேலும் பிரித்தானிய பயணிகள் தங்களது பயணக் காப்பீட்டை சரிபார்த்து கொள்வது, அவை முழுமையான பாதுகாப்பு காப்பீட்டை உறுதி செய்கிறதா என்பதையும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சரிபார்ப்பது போன்றவை முக்கியமானது என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |