சந்திரயான் 3 வெற்றியைக் கண்டு வயிற்றெரிச்சல் பட்ட பிரித்தானிய ஊடகவியலாளர்: பாகிஸ்தானியர் பதிலடி
நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை படைத்துள்ளது இந்தியா. சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதற்காக, அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலக நாடுகள் பல இந்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவரும் நிலையில், இந்தியா பெற்ற வெற்றியை சகிக்கமுடியாமல் வயிற்றெரிச்சலைக் கொட்டியுள்ளார்கள் பிரித்தானிய ஊடகவியலாளர்கள் சிலர்.
வயிற்றெரிச்சலை வெளிப்படையாக கொட்டிய பிரித்தானிய ஊடகவியலாளர்கள்
உலக நாடுகள் பல இந்தியாவின் வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், பிரித்தானிய ஊடகவியலாளர்கள் சிலர் இந்தியாவின் வெற்றியை சகிக்க முடியாமல் தங்கள் வயிற்றெரிச்சலை நேரலையிலேயே கொட்டியுள்ளார்கள்.
பிரபல பிரித்தானிய ஊடகமான பிபிசியின் ஊடகவியலாளர் ஒருவர், சரியான உள்கட்டமைப்பு இல்லாத, கடுமையான வறுமையில் வாடும், 700 மில்லியன் குடிமக்களுக்கு கழிப்பறை கூட இல்லாத ஒரு நாடாகிய இந்தியாவுக்கு, இவ்வளவு பெரிய செலவில் விண்வெளித்திட்டம் எல்லாம் தேவையா என்று கேட்டுள்ளார்.
I appear to have enraged Indian Twitter ? pic.twitter.com/SnhUU3zOjC
— Patrick Christys (@PatrickChristys) August 23, 2023
அதேபோல, பிரித்தானிய ஊடகமான GB News என்னும் ஊடக செய்தியாளரான Patrick Christys என்பவரும், இப்படி விண்வெளித்திட்டங்களில் பங்கேற்கும் நாடுகளுக்கெல்லாம் பிரித்தானியா நிதி உதவி செய்யக்கூடாது.
2016க்கும் 2021க்கும் இடையில் பிரித்தானியா இந்தியாவுக்குக் கொடுத்த 2.3 பில்லியன் பவுண்டுகளை இந்தியா திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தரப்பிலிருந்து பதிலடி
விடயம் என்னவென்றால், பாகிஸ்தான் தரப்பிலிருந்தும் பிரித்தானியாவின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு வந்துள்ளது! இந்தியாவில் பலருக்கு கழிவறை வசதி இல்லை, அப்படியிருக்கும்போது அவர்களுக்கு எதற்கு விண்வெளித்திட்டம், அவர்களுக்கு செய்த நிதியுதவியை திரும்பப் பெறவேண்டும் என கூறிய பிபிசி ஊடகவியலாளர் முதலானவர்களை கிழித்துத் தொங்கவிட்டுவிட்டார் பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவர்.
Mohsin Ali என்னும் அந்த பாகிஸ்தான் ஊடகவியலாளர், காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த இந்தியா, பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்ற 77 ஆண்டுகளிலேயே மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது என்று கூறியுள்ளதுடன், குறுகிய காலத்தில் இந்தியா விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்பதை பிரித்தானியர்களால் சகித்துக்கொள்ள முடியாததே பிரித்தானிய ஊடகவியலாளர்களின் வயிற்றெரிச்சலுக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய Mohsin Ali, எங்கள் இரண்டு நாடுகளுக்கும் ஒருவரது வெற்றியை மற்றவருக்குக் கொண்டாடத் தெரியும் என்று கூறியுள்ளதுடன், இந்தியாவை பாராட்ட பூக்கள் அனுப்புங்கள், எரிச்சலில் இருக்கும் பிரித்தானியர்களுக்கு எரிச்சலுக்கு தடவ மருந்து அனுப்புங்கள் என்கிற பாணியில் வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டார்.
அந்த விடியோ வைரலாகியுள்ளது. Mohsin Aliயின் ரியாக்ஷனைப் பார்த்து இணையவாசிகள் வியப்படைந்துள்ளதுடன், அவருக்கு பாராட்டும் தெரிவித்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |