தம்பதி இடையே 12 வயது வித்தியாசம்! பிரித்தானியாவில் இந்திய பெண், 2 குழந்தைகள் கொலையில் புதிய தகவல்கள்
பிரித்தானியாவில் கேரளாவை சேர்ந்த பெண் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரள தம்பதி
Ketteringல் வியாழன் அன்று அஞ்சு அசோக் (40) மற்றும் அவரின் குழந்தைகளான ஜீவா சாஜு (6), ஜான்வி சாஜு (4) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பில் அஞ்சுவின் கணவரான சாஜு (52) தற்போது பொலிஸ் விசாரணை மற்றும் காவலில் உள்ளார்.
2012ல் சாஜு மற்றும் அஞ்சு திருமணம் நடந்துள்ளது. 2021 அக்டோபரில் இருவரும் பிரித்தானியாவில் குடியேறியுள்ளனர். கேரளாவில் சாரதியாக பணியாற்றி வந்துள்ள சாஜுவுக்கு, பிரித்தானியாவில் சாரதியாக பணியாற்ற முடியாமல் போனதுடன், நிரந்தரமான வேலையும் கிடைக்கவில்லை.
Special arrangement
அதிர்ச்சியில் தந்தை
அஞ்சுவின் தந்தையும், சாஜுவின் மாமனாருமான அசோக் இந்த கொலை சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். ஏனெனில் மிகுந்த அக்கறையுள்ள மருமகன் தனக்கு கிடைத்துள்ளதாக அவர் நினைத்திருந்த வேளையில் அவர் தலையில் இடி விழுவது போல இந்த சம்பவம் நடந்துள்ளது.
சாஜுவுக்கு சிறிய விடயங்களுக்கு கூட பெரியளவில் கோபம் வரும் என அவர் தெரிவித்தார். இது குறித்து அசோக்கின் பள்ளி தோழியும், அவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுமான இந்திரா கூறுகையில், அசோக்கின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்னரே தற்கொலை செய்து இறந்துவிட்டார்.
பின்னர் கிருஷ்ணம்மா என்ற பெண்ணை அவர் மறுமணம் செய்த நிலையில் இரண்டு மகள்களான அஞ்சு மற்றும் அமிர்தாவை மிகுந்த சிரமப்பட்டு வளர்த்து படிக்க வைத்தார்.
Special arrangement
12 வயது வித்தியாசம்
அஞ்சுவுக்கும் - சாஜுவுக்கும் கடந்த 2012ல் திருமணம் நடந்தது, செய்தித்தாளில் திருமண விளம்பரத்தை பார்த்தே இருவருக்கும் திருமணம் நடந்தது. சாஜுவுக்கும், அஞ்சுவுக்கும் 12 வயது வித்தியாசம் இருப்பதால் இந்த திருமணத்திற்கு முதலில் அசோக் சம்மதிக்கவில்லை.
ஆனால் சாஜுவுக்கு அப்போது சவூதி அரேபியாவில் வேலை இருந்தது, அதன் மூலம் வெளிநாட்டில் வேலை பெறுவதற்கான வாய்ப்பை தானும் பெறலாம் என அஞ்சு நினைத்தாள் என கூறினார்.
இதனிடையில் பிரேதப் பரிசோதனைகள் செய்யப்பட்டு மூன்று உடல்களும் கேரளாவுக்கு அனுப்பப்படுவதற்கு சில நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Special arrangement