பிரித்தானிய மன்னர்-ராணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை: வெளியான பாசம் நிறைந்த புகைப்படம்
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் அட்டையை வெளியிட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இருவரும் இணைந்து இந்த ஆண்டிற்கான அதிகாரப்பூர்வமான கிறிஸ்துமஸ் தின வாழ்த்து அட்டையை வெளியிட்டுள்ளனர்.

இந்த கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையில் அரச தம்பதியினர் தங்களின் 20வது திருமண விழாவில் உள்ள எடுத்துக் கொண்ட பாசமிகு புகைப்படத்தை இடம்பெற செய்துள்ளனர்.
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள பிரிட்டிஷ் தூதரின் வில்லா வோல்கோன்ஸ்கி இல்லத்திற்கு சென்று இருந்த போது இந்த புகைப்படத்தை அரச தம்பதியினர் எடுத்துக் கொண்டனர்.
புகைப்படத்தில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இருவரும் தங்கள் கைகளை கோர்த்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருப்பது பார்க்க முடிகிறது.
வாழ்த்து அட்டையின் வடிவம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட வாழ்த்து அட்டையில் உள்ள அரச தம்பதியினரின் புகைப்படம் ஆழமான மற்றும் அழகான சிவப்பு நிற பார்டரால் சூழப்பட்டுள்ளது.
வாழ்த்து அட்டையில் கூறப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் “ அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என கூறப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |