மெளனம் கலைத்த மன்னர் மூன்றாம் சார்லஸ்: பேனா விபத்து குறித்து தெரிவித்த நகைச்சுவை
பேனா கசிவு விபத்து குறித்து மன்னர் மூன்றாம் சார்லஸ் முதல் முறையாக வெளிப்படை.
பேனா கசிவு நிகழ்வு குறித்து நகைச்சுவையாக சிரித்துக்கொண்டே குறிப்பிட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் முதல் முறையாக பேனா கசிவு சம்பவம் தொடர்பாக அவரது மெளனத்தை நகைச்சுவையுடன் கலைத்துள்ளார்.
ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து நாட்டின் புதிய மன்னராக அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார்.
அரசராக சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து நடைபெற்ற இரண்டு மூன்று அரச நிகழ்வுகளில் கையொப்பம் இடுவதற்காக வைக்கப்பட்டு இருந்த பேனாவில் கசிவு ஏற்பட்டு மன்னரை எரிச்சலடைய வைத்தது.
GETTY IMAGE
முதலாவதாக அவர் ராஜாவாக அறிவிக்கப்பட்ட அணுகல் கவுன்சில் கூட்டத்தில் ஆவணங்களில் கையெழுத்திடும் போது இடையூறாக பேனா ஒன்று தட்டுப்பட்டதை அடுத்து மன்னர் முகம் சுழித்தார்.
இரண்டாவதாக வடக்கு அயர்லாந்தில் ஏற்பட்ட பேனா கசிவு மன்னரை கோபமடைய வைத்ததுடன், “இந்த விஷயத்தை என்னால் தாங்க முடியாது” என எரிச்சலடைய வைத்ததும் சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்தநிலையில் இன்று ஃபைஃபில் உள்ள டன்பெர்ம்லைனுக்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கன்சார்ட் மற்றொரு பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்திட அழைக்கப்பட்டனர்.
REUTERS
அடுத்தடுத்த பேனா கசிவு சம்பவங்களுக்கு பிறகு, மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்கு அவரது சொந்த பேனாவைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
Dunfermline பார்வையாளர்கள் புத்தகத்தில் தனது கசியாத பேனாவால் கையெழுத்திட்ட மன்னர் அதை கமீலாவிடம் ஒப்படைத்த பிறகு, அவர் பேனா நாடகங்களைச் சிரித்துக்கொண்டே குறிப்பிட தொடங்கினார், மேலும் இவை மிகவும் ஆத்திரமூட்ட கூடிய சுபாவம் கொண்டது என மன்னர் மூன்றாம் சார்லஸ் அவரது பேனா கசிவு நிகழ்வுகள் குறித்து முதல் முறையாக வெளிப்படையாக மனம் திறந்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: லண்டன் மாரத்தான் போட்டியில் அரங்கேறிய சோகம்: வெற்றி இலக்கிற்கு அருகில் சுருண்டு விழுந்த நபர்
மறைந்த ராணியின் மரணத்தைத் தொடர்ந்து அரச துக்கக் காலம் முடிவடைந்த பின்னர், டன்ஃபெர்ம்லைனுக்கு சார்லஸ் மற்றும் கமிலாவின் வருகையானது நடைபெற்றுள்ளது.
PA