பிரித்தானியாவில் பொலிஸாரால் துரத்தப்பட்ட நபர்: லண்டன் ரயில் பாதையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு
பிரித்தானியாவில் பொலிஸாரால் துரத்தப்பட்ட நபர் தெற்கு லண்டனில் உள்ள ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரை துரத்திய பொலிஸார்
புதன்கிழமை அதிகாலை 3.26 மணியளவில் ஸ்ட்ரீதம் ஹை ரோடு(Streatham High Road) நோக்கி சென்ற கார் நிற்க தவறியதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நிற்காமல் சென்ற காரை பொலிஸார் சிறிது நேரம் வரை துரத்தி சென்று உடனடியாக காரை நிறுத்துமாறு சமிக்கைகள் செய்ததை மெட் பொலிஸாரின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Getty
ஆனால் ஸ்ட்ரீத்தாமின் பிரன்சுவிக் மியூஸில்(Brunswick Mews, Streatham) விபத்துக்குள்ளான பிறகு கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார், மேலும் அப்போது பொலிஸாரும் பாட்டர்ஸ் லேனில் அருகில் தப்பியோடிய நபர் மீது வைத்து இருந்த பார்வையை இழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பொலிஸாரின் பார்வையில் இருந்து தப்பிய நபரை கண்டுபிடிக்க காவல்துறையின் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட உடல்
இறுதியில் எஸ்ட்ரேஹாம் சாலைக்கு (Estreham Road) அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்துக்கு அருகே சம்பந்தப்பட்ட 34 வயது நபரின் உடலை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
Google
இதனை தொடர்ந்து பொலிஸார் வழங்கிய தகவலில், ரயில் லைன் பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்ட பின் காவல்துறை மற்றும் துணை மருத்துவர்கள் விழுந்து கிடந்த நபரை பரிசோதித்தனர், ஆனால் பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்தைக்கான சுயாதீன அலுவலகமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் பொலிஸாரால் துரத்தப்பட்ட பின்னர் தெற்கு லண்டனில் உள்ள ரயில் பாதைக்கு அருகே சம்பந்தப்பட்ட 34 வயது நபர் இறந்துள்ள சம்பவம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Google Street View