முழு பிரித்தானியாவும் போருக்குத் தயாராகவேண்டும்: ராணுவத் தலைவர் எச்சரிக்கை
என்றைக்கு ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதோ, அன்றே பல ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா மீது சந்தேகமும் அச்சமும் உருவாகிவிட்டது.
ரஷ்ய ஊடுருவல் அல்லது தாக்குதல் மற்ற நாடுகளுக்கும் தொடரலாம் என்னும் அச்சத்தில் பல நாடுகள் தங்கள் ராணுவங்களை வலுப்படுத்திக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், நம்ராணுவம் மட்டு ம் தயாரானால் போதாது, முழு பிரித்தனியாவும் போருக்குத் தயாராகவேண்டும் என பிரித்தானிய பாதுகாப்புப்படைகளின் தலைவர் எச்சரித்துள்ளார்.

ராணுவத் தலைவர் எச்சரிக்கை
சமீபத்தில், ரஷ்யாவால் அபாயம் ஏற்படலாம் என எச்சரித்திருந்தார் பிரித்தானியாவின் உளவுத்துறைத் தலைவரான Blaise Metreweli எச்சரித்த விடயம் பரபரப்பை உருவாக்கியது.
இந்நிலையில், அவரது கருத்தை ஆதரிப்பதுபோல், பிரித்தானிய பாதுகாப்புப்படைகளின் தலைவரான, சர் ரிச்சர்ட் நைட்டன் (Air Chief Marshal Sir Rich Knighton) எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.
நாட்டின் ராணுவத்தை வலுப்படுத்துவது மட்டும் போதாது. ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள முழு பிரித்தானியாவும் தயாராகவேண்டும் என்று கூறியுள்ளார் ரிச்சர்ட்.
பிரித்தானியாவின் மகன்களும் மகள்களும் போருக்குத் தயாராகவேண்டும் என்றும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யத் தயாராகவேண்டும் என்றும் ரிச்சர்ட் கூறியுள்ளார்.
நாட்டைக் காப்பதில் அனைவரது பங்களிப்பும் தேவை என்று கூறியுள்ள ரிச்சர்ட், கட்டியெழுப்பவும், சேவை செய்யவும், தேவையானால் போரிடவும் பிரித்தானியர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றும் பிரித்தானிய பாதுகாப்புப்படைகளின் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை பிரித்தானிய ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகிவருகிறது.