பிரித்தானியா, NATO நாடுகளில் மீண்டும் கட்டாய ராணுவ சேவை? ஐரோப்பிய நாடொன்றின் பரபரப்பு கோரிக்கை
உக்ரைன் போர் மூன்றாம் ஆண்டில் நுழையும் நிலையில், பிரிட்டன் மற்றும் பிற NATO கூட்டாளிகள் கட்டாய ராணுவ சேவையை (conscription) பரிசீலிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் ஆண்டில் உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது போர் மூன்றாம் ஆண்டிலும் கால் எடுத்து வைத்து விட்டது ஆனால் போர் முடிவுக்கு வரும் எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இதனால் ஐரோப்பிய மற்றும் நேட்டோ நாடுகளிலும் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதே சமயம் NATO கூட்டாளிகளின் ராணுவ வலிமை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
இதனையடுத்து, பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகள் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ரூ.451 கோடி விலையுயர்ந்த நெக்லஸ்! மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு அம்பானி வழங்கிய பரிசு என்ன தெரியுமா?
லாட்வியாவின் முன்னோடி முயற்சி மற்றும் கோரிக்கை
இந்நிலையில் சமீபத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடு பேசிய லாட்வியாவின் வெளியுறவு அமைச்சர் கிரிஸ்ஜானிஸ் கரின்ஸ் (Latvia's foreign minister Krisjanis Karins) "உக்ரைன் போர் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு உணர்வை தூண்டியுள்ளது. பெரிய ராணுவம் கொண்ட நாடுகள் கட்டாய ராணுவ சேவையை அமல்படுத்தினால் (mandatory military service), அது ஐரோப்பிய பாதுகாப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.
மேலும், "கட்டாய ராணுவ சேவை ராணுவ திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், தேசிய உணர்வையும் வளர்க்கும்".
அத்துடன் “பிரித்தானியாவைப் போன்ற பெரிய நாடுகள் கட்டாய ராணுவ சேவையை அமல்படுத்தினால், ஐரோப்பிய பாதுகாப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று கூறினார்.
உக்ரைன்-ரஷ்யா போருக்கு பிறகு லாட்வியா கடந்த ஆண்டு கட்டாய ராணுவ சேவையை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியா பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் பதில்
ட்டாய ராணுவ சேவையை குறித்த விவாதங்களுக்கு பதிலளிக்கும் விதமாக கடந்த வாரம் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் (Munich Security Conference) பிரித்தானியா பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் (UK Defence Secretary Grant Shapps) "தற்போது கட்டாய ராணுவ சேவைக்கான எந்த திட்டமும் இல்லை" என்று உறுதியாக தெரிவித்தார்.
பிரிட்டனில் தற்போது தொழில்முறை ராணுவமே உள்ளது என்றும், அதன் திறன் மற்றும் தயார்நிலை தங்களுக்கு போதுமானது என்றும் அவர் குறிப்பிட்டார். கட்டாய ராணுவ சேவை தனிநபர் சுதந்திரத்தை மீறுவதாகக் கருதப்படுகிறது.
பிரிட்டன் தனிநபர் சுதந்திரத்தை மதிக்கும் நாடாக இருப்பதால், இந்த முறை ஏற்புடையதாக இல்லை. இருப்பினும், உலகளாவிய பாதுகாப்பு சூழலில் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்." என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |