பிரித்தானியாவில் 14 வயது சிறுவன் மரணம்: 6 டீன் ஏஜ் இளைஞர்கள் கைது
பிரித்தானியாவில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் 6 டீன் ஏஜ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 வயது சிறுவன் மரணம்
பிரித்தானியாவின் நியூகேஸில்(Newcastle) பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 9ம் திகதி 14 வயதுடைய கோர்டன் கோல்ட் (Gordon Gault) என்ற சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டான்.
எல்ஸ்விக் நகரப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் கோர்டன் கோல்ட் 6 நாட்களுக்கு பிறகு உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 6 டீன் ஏஜ் இளைஞர்கள்
இந்நிலையில் சிறுவன் கோர்டன் கோல்ட் கொலை வழக்கு தொடர்பாக 16 முதல் 17 வயதுடைய 6 டீன் ஏஜ் சிறுவர்கள் வியாழக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் 6 பேரும் இன்று நார்த் டைன்சைடில் உள்ள மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இதற்கிடையில் நார்தம்ப்ரியா காவல்துறையின் தலைமை காவலர் மேட் ஸ்டீல், கோர்டன் கோல்ட் சிறுவன் மரணம் தொடர்பாக விரிவான விசாரணையை நடத்தி வருவதாகவும், தங்களின் எண்ணங்கள் உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் அன்புக்குரியவர்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |