புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 40,000 பவுண்டு- பிரித்தானியாவின் புதிய திட்டம்
பிரித்தானியாவில் புகலிட கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்ட குடும்பங்கள், நாட்டை விட்டு வெளியேறுவதை ஊக்குவிக்க 40,000 பவுண்டுகள் வரை வழங்கும் புதிய திட்டத்தை உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் சுமார் 150 குடும்பங்களை குறிவைத்து செயல்படுத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு நபருக்கும் 10,000 பவுண்டுகள் வரை வழங்கப்படும், ஆனால் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி.

ஏழு நாட்களுக்குள் இந்த ஊக்கத் தொகையை ஏற்காவிட்டால், கட்டாய வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கான தங்குமிட வசதி ஆண்டுக்கு 158,000 பவுண்டுகள் வரை செலவாகிறது. இதை குறைப்பதற்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாக மஹ்மூத் கூறியுள்ளார்.
இதில் டென்மார்க் நாட்டின் மாதிரியைப் பின்பற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டம் அரசியல் விவாதத்தையும் தூண்டியுள்ளது.
2025-ஆம் ஆண்டு, 82,100 புகலிட கோரிக்கை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 58 சதவீதம் நிராகரிக்கப்பட்டன. கடந்த ஆண்டு 28,004 பேர் தன்னார்வமாக நாடு திரும்பினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |