Apple, Google நிறுவனங்களுக்கு 3 மாத காலக்கெடு - பிரித்தானிய அரசு அதிரடி
பிரித்தானிய அரசு, குழந்தைகள் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டுகள் மூலம் நிர்வாண படங்களை எடுக்கவோ, அனுப்பவோ, பெறவோ முடியாத வகையில் புதிய சட்டத்தை அறிவித்துள்ளது.
இதற்காக Apple, Google போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 3 மாத காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “குழந்தைகளின் பாதுகாப்பில் சலுகை இல்லை. குழந்தைகள் நிர்வாண படங்களை எடுக்கவோ, பகிரவோ அல்லது பார்க்கவோ முடியாத உலகின் முதல் நாடாக பிரித்தானியா மாறும்" என்று Tech Week நிகழ்வில் தெரிவித்தார்.

இந்த சட்டத்தின் படி, அனைத்து சாதனங்களிலும் (புதியதும் பழையதும்) பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக இயங்க வேண்டும்.
Apple-ன் Communication Safety மற்றும் Google-ன் Sensitive Content Blur போன்ற தொழில்நுட்பங்கள் குழந்தைகள் அனுப்பும் அல்லது பெறும் நிர்வாண படங்களை தானாக கண்டறிந்து தடுக்கும்.
SafeToNet போன்ற பிரித்தானிய நிறுவனங்கள் AI அடிப்படையிலான n*de image detection தொழில்நுட்பத்தை வழங்குகின்றன. இதனால், குழந்தைகள் தவறுதலாகவும், திட்டமிட்டும் நிர்வாண படங்களை பகிர முடியாது.
ஆனால், Signal போன்ற மெசேஜிங் சேவைகள் இந்த நடவடிக்கையை எதிர்த்து, “இது குழந்தைகளை பாதுகாப்பதற்குப் பதிலாக, பெரிய அளவிலான கண்காணிப்பு அமைப்பை உருவாக்கும்” என எச்சரித்துள்ளன.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், பிரித்தானியா உலகளவில் முன்னுதாரணமாக இருக்கும். பிற நாடுகளும் இதே மாதிரி சட்டங்களை கொண்டு வர வாய்ப்பு உள்ளது.
ஆனால், தனியுரிமை மற்றும் கண்காணிப்பு சிக்கல்கள் குறித்து விவாதம் தொடர்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |