வெளியேறுவதற்குள் தனது திருமண விழாவை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்ட போரிஸ் ஜான்சன்!
ராஜினாமா செய்யும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஆடம்பரமான திருமண விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
வியாழன் அன்று ராஜினாமா செய்வதாகக் கூறிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், இம்மாத இறுதியில் தனது உத்தியோகபூர்வ Chequers country இல்லத்தில் மனைவி கேரியுடனான தனது திருமணத்தைக் குறிக்கும் வகையில் பெரிய திருமண விருந்து ஒன்றை நடத்த உள்ளார் என்று மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய பிரதம மந்திரி தேர்ந்தெடுக்கப்படும் வரை தனது பதவியில் நீடிக்கவுள்ள போரிஸ் ஜான்சன் ஒரு ஆடம்பர விருந்தை ஏற்பாடு செய்துள்ளதாக, கன்சர்வேடிவ் கட்சியின் பெயரிடப்படாத மூத்த உறுப்பினர்களை மேற்கோள் காட்டி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த பிரதமர் யார்? ரிஷி சுனக் வரிசையில் மற்றோரு இந்திய வம்சாவளி பெண்.!
பிரித்தானிய பிரதமர்கள் லண்டனில் உள்ள அதிகாரப்பூர்வ எண் 10 டவுனிங் தெரு இல்லத்திற்கு கூடுதலாக, பாரம்பரியமாக தலைநகருக்கு வடக்கே உள்ள 16-ஆம் நூற்றாண்டின் English country இல்லமான Chequers-ஐ, ஒரு தனிப்பட்ட ஒய்வு இல்லமாகவும், உலக தலைவர்கள் தங்கவும் மற்றும் எப்போதாவது விருந்துகளை நடத்துவதற்கு பயன்படுத்துகின்றனர்.
பிரதமர் ஜான்சன் கடந்த ஆண்டு 34 வயதான கேரியை, மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு நடுவில் குறைந்த முக்கிய, ரகசிய விழாவில் திருமணம் செய்து கொண்டார்.
2 நாட்களாக வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி இலங்கைப் பெண்னுக்கு திடீர் பிரசவம்!
இந்த ஜோடியின் திருமண விருந்து ஜூலை 30 அன்று திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் இது மிகப் பெரிய மற்றும் கவர்ச்சியான விவகாரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்கள் போரிஸ் ஜான்சனின் திருமண விருந்துக்கு செல்ல ஆர்வமாக இருப்பதாகவும், பல நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அழைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.