பிரித்தானிய பொதுத் தேர்தல் திகதி: ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரிஷி சுனக்!
வருகின்ற மே 2ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மறுத்துள்ளார்.
முற்றுப்புள்ளி வைத்த ரிஷி சுனக்
பிரித்தானியாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மே 2ம் திகதியே பொது தேர்தலும் நடத்தி முடிக்கப்படும் என்று எழுந்த ஊகங்களுக்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தேர்தல் திகதி தொடர்பாக ITV எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், “மே 2ம் திகதி பொதுத் தேர்தல் நடக்காது” என்று தெரிவித்தார்.
2025ம் ஆண்டுக்குள் பிரித்தானியாவில் பொது தேர்தல் நடைபெற வேண்டும், ஆனால் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதனை வசந்த காலத்திற்குள் அழைக்கலாம் என்ற ஊகங்கள் இருந்து வந்தன. இது பரவலாக நிராகரிக்கப்படாமலும் இருந்து வந்தது.
அதற்கு ஏற்ப பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கும் 2024ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தேர்தல் நடைபெறும் என்பது தன்னுடைய “பணி அனுமானம்” (working assumption) எனத் தெரிவித்து இருந்தார்.
ஊகங்கள் வேகமாக பரவி வந்த இந்நிலையில், மே 2ம் திகதி பிரித்தானிய பொதுத் தேர்தல் நடைபெறும் என்ற சாத்தியமான திகதி குறித்த கூற்று நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |