பிரித்தானியாவில் இளைஞரை துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்! ஒருவாரத்திற்கு பிறகு பறிப்போன உயிர்
கடந்த வாரம் பொலிஸ் அதிகாரியால் பிரித்தானியாவின் சர்ரே கிராமத்தில் சுடப்பட்ட இளைஞர் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞரை சுட்ட பொலிஸார்
பிரித்தானியாவின் சர்ரே(Surrey) கிராமத்தில் நாஃபில்(Knaphill) நர்சரி சாலையில் நள்ளிரவுக்கு பிறகு ஆயுதம் ஏந்திய நபர் உட்பட இருவருக்கு இடையிலான வாக்குவாதம் குறித்த தகவலை தொடர்ந்து சர்ரே பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவரான 29 வயது இளைஞரை பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய துப்பாக்கியால் சுட்டார்.
பொலிஸாரின் துப்பாக்கி சுட்டு தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுள்ள செல்லப்பட்டார்.
இதற்கிடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்பது பொலிஸார் விசாரணையில் தெரியவந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இளைஞர் உயிரிழப்பு
இந்த நிலையில் துப்பாக்கி சுட்டி காயமடைந்த இளைஞர் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பொலிஸாரின் இந்த செயல் குறித்து பொலிஸ் நடத்தையை கண்காணிக்கும் சுயாதீன அலுவலகம் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர் உயிரிழந்து இருப்பது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
அதிகாரியிடம் இருந்து ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அதே வேளையில், சம்பவ இடத்தில் காவல்துறையுடன் சம்பந்தம் அல்லாத ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக IOPC தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |