“பழிக்கு பழி போர்” கிடையாது…ஹரி & மேகன் நெட்பிக்ஸ் தொடர் மெளனம் காக்கும் மன்னர் சார்லஸ்
இளவரசர் ஹரி மற்றும் மேகன் நெட்பிக்ஸ் தொடர் பிரித்தானிய அரச குடும்பத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், “ பழிக்கு பழி வாங்கும் போர்” கிடையாது என அரச குடும்பம் சபதம் செய்து இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
ஹரி & மேகன் ஆவணப்படம்
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் நெட்பிக்ஸ் ஆவணப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி இருந்த நிலையில், இந்த ஆவணப்படம் அரச குடும்பம் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆவணப்படத்தில் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டனை ஹரியின் மனைவி மேகன் மார்க்கல் முதன் முதலில் சந்தித்து கட்டி அணைத்த போது உணர்வற்ற நிலையில் இருந்ததாக மேகன் குறிப்பிட்ட போது, அதை இளவரசர் ஹரி நிறுவனத்தின் மையத்தில் உள்ள இனவெறியின் "உணர்வற்ற சார்பு" என அடையாளப்படுத்தினார்.
Netflix
அத்துடன் மறைந்த மாட்சிமை ராணி இரண்டாம் எலிசபெத்-தை முதல் முறையாக அரண்மனையில் சந்தித்தது தொடர்பாக மேகன் மார்க்கல் நடித்து காட்டியதை மனைவியுடன் சேர்ந்து இளவரசர் ஹரி ஆழ்ந்த வெட்கத்துடன் அமர்ந்திருந்ததை அரச வட்டாரங்கள் ஆச்சரியத்துடன் எதிர்கொண்டன.
பழிக்கு பழி வாங்க போவது இல்லை
நெட்பிக்ஸ் ஆவண தொடர் அரச குடும்பம் மற்றும் அரச குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஹரி மற்றும் மேகனின் ஆவணப்படத்தை “சர்க்கஸ்” என குறிப்பிட்டுள்ளது.
Getty Images/ Daily Mirror
அத்துடன் ஹரி மற்றும் மேகனின் இந்த சர்க்கஸ் விளையாட்டிற்கு, மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் கண்ணியமான மௌனத்தை" கடைப்பிடிப்பார்கள் என்றும் எந்தவொரு பழிக்கு பழி வாங்கும் போரில் ஈடுபட போவது இல்லை என Insiders தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் மன்னர் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் “வழக்கம் போல் வணிகத்தை" தொடர உறுதியளித்துள்ளனர் என்றும் Insiders தகவல் தெரிவித்துள்ளனர்.