இந்தியாவின் நயாரா உட்பட 90 நிறுவனங்களுக்கு பிரித்தானியா தடை
இந்தியாவின் நயாரா உட்பட 90 நிறுவனங்களுக்கு பிரித்தானிய அரசு பொருளாதார தடை விதித்துள்ளது.
உக்ரைனில் நடைபெறும் போருக்கு நிதியளிக்கும் ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை குறைக்கும் நோக்கில், பிரித்தானிய அரசு 90 நிறுவனங்களுக்கு புதிய தடைகளை அறிவித்துள்ளது.
இதில் இந்தியாவின் Nayara Energy Limited நிறுவனமும் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் பொதுநல அலுவலகம் (FCDO) மற்றும் நிதி அமைச்சகம் இணைந்து வெளியிட்ட இந்த அறிவிப்பில், ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்கும் நிறுவனங்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவியதாக கூறப்படும் 4 சீன எண்ணெய் துறைமுகங்கள், 44 'shadow fleet' கப்பல்கள் மற்றும் இந்தியாவின் நயாரா எனர்ஜி ஆகியவை இந்த தடைகளில் அடங்குகின்றன.
2024-ஆம் ஆண்டு மட்டும் நயாரா சுமார் 100 மில்லியன் எண்ணெய் பீப்பாய்கள் (ரூ.41,600 கோடி மதிப்பில்) ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளதாக பிரித்தானியா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், ரஷ்யாவின் ,முக்கிய எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil ஆகியவற்றிற்கும் நேரடி தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் ரஷ்யா நடத்திய எரிசக்தி வாரிய மாநாடு நேரத்தில் ஒத்துப்போகும் வகையில் திட்டமிட்டுள்ளதாகவும், ரஷ்யா மேற்கத்திய நாடுகளை தவிர்த்து புதிய சந்தைகளை தேட முயற்சிக்கும் சூழலில் இத்தடைகள் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் FCDO தெரிவித்துள்ளது.
இதனிடையே, நயாரா எனர்ஜி, இந்திய சட்டங்களை பின்பற்றி செயல்படுவதாகவும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கு உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்த தடைகளையும் 'அடிப்படையற்றவை' என அந்நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK sanctions Nayara Energy, Nayara Energy Russian oil imports, UK Russia oil crackdown 2025, Nayara Energy Rosneft ownership, UK sanctions Indian oil companies, Russian crude oil India 2024, Nayara Energy Vadinar refinery, UK FCDO sanctions list 2025, Rosneft Lukoil UK restrictions, India Russia oil trade impact