ரஷ்யாவின் நிழல் கப்பல் படைக்கு எதிராக பிரித்தானியா தடை., போர் நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சி
ரஷ்யாவின் shadow fleet என அழைக்கப்படும் நிழல் கப்பல் படைக்கு எதிராக, பிரித்தானிய அரசாங்கம் புதிதாக 30 கப்பல்களுக்கு தடைகளை விதித்துள்ளது.
இந்த கப்பல்கள், கடந்த ஆண்டு 4.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள எண்ணெய் மற்றும் எண்ணெய் சார்ந்த பொருட்களை சட்டவிரோதமாக கடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, பிரித்தானிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான பாரிய தடைகளை உள்ளடக்குகிறது. இந்த கப்பல்களுடன் தொடர்புடைய இரண்டு காப்பீட்டு நிறுவனங்களும் தடைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
shadow fleet என்பது என்ன?
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதியை எளிதாக்க தயாராக இருக்கும் நூற்றுக்கணக்கான மர்மமான டேங்கர்களை shadow fleet (நிழல் கப்பல் படை) என குறிப்பிடப்படுகிறது.
600-க்கும் மேற்பட்ட கப்பல்கள் இந்த படையில் இருப்பதாக CNN அறிக்கை கூறுகிறது.
இந்த கப்பல்களில் பலவற்றை யார் வைத்திருக்கிறார்கள் மற்றும் யார் இயக்குகிறார்கள் என்பது ஒரு புதிராகவே உள்ளது.
இந்த கப்பல்கள் தடை விதிக்கப்பட்ட ஐரோப்பிய மற்றும் பிரித்தானிய எண்ணெய் சந்தைகளில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் லாபத்தைத் தேடுகின்றன.
G7 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் பேசும் போது, வெளியுறவுத் துறை செயலாளர் டேவிட் லாமி, “இது ரஷ்யாவின் நிழலுலக கப்பல் நடவடிக்கைகளை குறைக்க பிரித்தானியா எடுத்த மிகப்பாரிய நடவடிக்கை,” என கூறினார்.
இந்த புதிய தடைகள் ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை வெகுவாகக் குறைத்து அதன் போர் முயற்சிகளை கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |