ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை முயற்சிக்கும் பிரித்தானியா
பிரித்தானியா, Brexit-க்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்துடனான அதன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் புதிய ஒப்பந்தங்களைத் தேடுகிறது.
குறிப்பாக எஃகு மற்றும் மின்சார வாகனங்கள் தொடர்பான வர்த்தக விதிமுறைகள் பிரித்தானிய தொழில்துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால், அத்துறைகள் சார்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம், சீனாவில் இருந்து வரும் மலிவான எஃகு இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் புதிய எஃகு வரி விதிகளை அறிவித்துள்ளது.
இதனால், ஜூலை 1 முதல் அதிக வரி விதிக்கப்படுவதால் பிரித்தானிய எஃகு தொழில் பாதிக்கப்படும்.

அதே நேரத்தில், 2027 முதல் மின்சார வாகனங்களுக்கு கடுமையான rules of origin விதிகள் அமுலுக்கு வருகிறது.
அதன்படி, ஒரு EV-இன் மதிப்பில் குறைந்தது 40 சதவீதம் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட பாகங்களாக இருக்க வேண்டும்.
ஆனால், பேட்டரி மட்டும் 50 சதவீதம் மதிப்பை கொண்டதால், உள்ளூர் உற்பத்தி குறைவாக உள்ள நிலையில் இந்த விதிகளை பூர்த்தி செய்வது கடினம்.
இந்நிலையில், எஃகு மற்றும் மின்சார வாகனங்கள் குறித்து இந்த ஆண்டே விவாதிக்கப்பட வேண்டும் என பிரித்தானிய அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
EU-UK உச்சி மாநாடு கோடைக்காலத்தில் நடைபெற உள்ளது. அங்கு உணவு, இளைஞர் பரிமாற்றம், ஆற்றல் போன்ற துறைகளுடன், எஃகு மற்றும் EV தொடர்பான ஒப்பந்தங்களும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தங்கள் 80 பில்லியன் யூரோ மதிப்புள்ள பிரித்தானிய-ஐரோப்பிய ஒன்றிய வாகன வர்த்தகத்தை பாதுகாக்கும் எனக் கூறப்படுகிறது.
அதேநேரம், பிரித்தானியாவின் விருப்பத்தை கவனத்தில் எடுத்துள்ளதாக EU அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், இருதரப்பு உறவுகள் மீண்டும் வலுப்பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |