தொடரும் போர்., 1.5 லட்சம் ட்ரோன்களை வழங்கும் பிரித்தானியா
பிரித்தானிய அரசு, உக்ரைனுக்கு 2026 இறுதிக்குள் 1,50,000 ட்ரோன்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கான நிதி தொகை 752 மில்லியன் பவுண்டு (அமெரிக்க $996 மில்லியன்) ஆகும்.
பிரித்தானிய பாதுகாப்புத் துறை அமைச்சர் டான் ஜார்விஸ், பிரஸ்சல்ஸில் நடைபெற்ற உக்ரைன் பாதுகாப்பு தொடர்பு குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தப் பெரிய உதவி தொகை, பிரித்தானியா வழங்கிய 2.26 பில்லியன் பவுண்டு கடனின் ஒரு பகுதியாகும்.
இந்த தொகுப்பில் 350 வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் தரை அடிப்படையிலான ரேடார் அமைப்புகளும் அடங்கும். இந்தக் கடன், முடக்கப்பட்ட ரஷ்ய அரசுச் சொத்துக்களின் வருவாயால் ஆதரிக்கப்படுகிறது.
ஜார்விஸ், ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சருடன் இணைந்து கூட்டத்தை நடத்தினார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், பிரான்ஸ் மற்றும் உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகளின் அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.
இந்த உதவி, உக்ரைனின் பாதுகாப்புத் திறனை அதிகரிக்கும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்
இதனிடையே, ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேலும் 12 மாதங்களுக்கு புதுப்பிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
வியாழனன்று பிரஸ்ஸல்ஸில் நடந்த உச்சிமாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த பொருளாதாரத் தடைகள் முதல் தடவையாக ஒரு வருடத்திற்கு புதுப்பிக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |