சுவிட்சர்லாந்து செல்லும் ராஜ குடும்ப உறுப்பினர்கள்: சுவாரஸ்ய பின்னணி
பிரித்தானிய இளவரசர் வில்லியம், வார இறுதியில் சுவிட்சர்லாந்துக்குச் செல்ல இருக்கிறார்.
சுவிட்சர்லாந்து செல்லும் இளவரசர்
விடயம் என்னவென்றால், ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்துக்குச் செல்லும் ராஜ குடும்ப உறுப்பினர் இளவரசர் வில்லியம் மட்டும் அல்ல!
ஸ்பெயின் ராஜ குடும்பத்தின் சார்பில் இளவரசி Leonor மற்றும் அவரது தங்கையான Infanta Sofia ஆகியோரும் சுவிட்சர்லாந்துக்குச் செல்ல இருக்கிறார்கள்.
இப்படி இரண்டு ராஜ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் சுவிட்சர்லாந்துக்குச் செல்ல என்ன காரணம்?
அதாவது, ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில், மகளிர் யூரோ 2025 கால்பந்து போட்டியில், இங்கிலாந்து அணியும் ஸ்பெயின் அணியும் மோத இருக்கின்றன.
அதைக் காண்பதற்காகத்தான், பிரித்தானியா சார்பில் இளவரசர் வில்லியமும், ஸ்பெயின் சார்பில் அந்நாட்டு இளவரசிகளும் சுவிட்சர்லாந்துக்குச் செல்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |