பிரித்தானியா - உக்ரைன் இடையிலான புதிய ராணுவ ஒப்பந்தம்: ஸ்டார்மர் எச்சரிக்கை
பிரித்தானியா - உக்ரைன் இடையிலான புதிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
உக்ரைன் - பிரித்தானியா ஒப்பந்தம்
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி லண்டனின் 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற சந்திப்பில் பிரித்தானிய ஜனாதிபதி சர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் இருநாட்டு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க இராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், பிரித்தானியாவின் மேம்பட்ட தொழில்நுட்ப உற்பத்தி திறனையும், உக்ரைனின் நேரடி போர் கள தொழில்நுட்ப அறிவையும் ஒருங்கிணைந்து புதிய ட்ரோன் தொழில்நுட்ப உருவாக்குதல் ஆகும்.
மேலும் உக்ரைனிய தலைநகர் கீவ்வில் செயற்கை நுண்ணறிவு மையத்தை உருவாக்க பிரித்தானியா £500,000 நிதியுதவி வழங்கியுள்ளது.
பிரித்தானியாவின் தொடர் ஆதரவு
ஈரான் போருக்கு பிறகு உலக நாடுகளின் கவனம் மத்திய கிழக்கு நாடுகள் மீது திசை திரும்பி இருந்தாலும், உக்ரைனுக்காக பிரித்தானியாவின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார்.
மேலும், மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையை ரஷ்யா தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள உலக நாடுகள் ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்று எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |