11 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம்; பிரித்தானிய தமிழ் சிறுமி போதனா உலக சாதனை
uk tamil bodhana sivanandan become world youngest wgm at 11: பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழ் சிறுமியான போதனா சிவானந்தன், 11 வயதில் வுமன் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று, இந்த பட்டம் வென்ற உலகின் இளம் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
11 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம்
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற 46வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில், பிரித்தானியா சார்பில் பங்கேற்ற போதனா சிவானந்தன், 11 சுற்றுகளிலும் விளையாடி 8 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார்.

வுமன் கிராண்ட் மாஸ்டர்(women Grand master) பட்டம் பெற தேவையான 2300 மதிப்பீடுகளை அவர் கடந்துள்ளதை சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு உறுதிப்படுத்தியது.
At just 11 years old, Bodhana Sivanandan has become the youngest player in history to fulfil the requirements for the Woman Grandmaster (WGM) title. 🔥
— International Chess Federation (@FIDE_chess) September 29, 2026
Representing England on board one at the 46th FIDE Chess Olympiad, Bodhana secured her third and final WGM norm to achieve the… pic.twitter.com/fMF17OmTj6
தனது 11 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ள போதனா சிவானந்தன், உலகின் இளம் வயது WGM என்ற சாதனையை படைத்துள்ளார்.
ரஷ்யாவின் கேடரினா லாக்னோ, 12 வயது 4 மாதங்களில் வைத்திருந்த இந்த 10 ஆண்டு கால சாதனையை போதனா சிவானந்தன் முறியடித்துள்ளார்.
போதனா சிவானந்தன்
வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோவில் பிறந்து வளர்ந்து வரும் போதனா சிவானந்தனின் பெற்றோர், தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ஐடி துறையில் பணியாற்றி வரும் அவரது தந்தை சிவானந்தன் வேலாயுதம், கடந்த 2007 ஆம் ஆண்டு லண்டனுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
கொரோனா காலத்தில் அவரது தந்தையின் நண்பர் வீட்டிற்கு கொண்டு வந்த சதுரங்க பலகையில் தனது 5 வயதிலே விளையாட தொடங்கியுள்ளார்.
அவர் முன்னதாகவே சதுரங்க விளையாட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
[
]
கடந்த மாதம், கோவென்ட்ரியில் நடைபெற்ற 2026 பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், பிரித்தானியாவின் மிக இளம் வயது மகளிர் சதுரங்க சாம்பியன் ஆனார்.
ஏற்கனவே யுகே ஓபன் மகளிர் பிளிட்ஸ் சாம்பியனாகவும், பிரிட்டிஷ் மகளிர் ரேபிட் சாம்பியனாகவும் திகழ்கிறார்.

2024 ஆம் ஆண்டில் எந்தவொரு சர்வதேச விளையாட்டிலும் பிரித்தானியாவை பிரதிநிதித்துவப்படுத்திய மிக இளைய நபர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.
அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டில் ஒரு கிளாசிக்கல் கிராண்ட்மாஸ்டரைத் தோற்கடித்த மிக இளைய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.