யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட்: பிரித்தானியர் ஒருவருக்கு அடித்த £110 மில்லியன் அதிர்ஷ்ட மழை
யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட்டில் கலந்து கொண்டு லொட்டரி டிக்கெட் வைத்து இருக்கும் பிரித்தானியர் ஒருவர் 110 மில்லியன் பவுண்டு-க்கும் அதிகமான பரிசு தொகையை வென்றுள்ளார்.
பிரித்தானியருக்கு லொட்டரியில் அடித்த ஜாக்பாட்
பிரித்தானியாவில் லொட்டரி டிக்கெட் வைத்து இருக்கும் நபர் ஒருவர் யூரோமில்லியன்ஸ்(EuroMillions) டிராவில் சுமார் 111.7 மில்லியன் பவுண்டுகள் வெற்றி பெற்று இருப்பதாக கேம்லாட் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற டிராவில் தாம் வெற்றி பெற்று இருக்கிறோமா என்பதை அறிய லொட்டரி ஜாக்பாட்டில் கலந்து கொண்டவர்கள் விரைவாக தங்களது டிக்கெட்டுகளை உடனடியாக சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Alamy
தேசிய லொட்டரியின் மூத்த ஆலோசகர் ஆண்டி கார்ட்டர், யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட்டில் கலந்து கொண்ட பிரித்தானியர்களுக்கு இது அற்புதமான இரவு, லொட்டரி டிக்கெட் வைத்து இருக்கும் பிரித்தானியர் ஒருவர் 111.7 மில்லியன் பவுண்டுகள் வெற்றி பெற்றுள்ளார்.
பங்கேற்பாளர்கள் உடனடியாக தங்கள் லொட்டரி டிக்கெட்டை சரிபார்த்து விட்டு, நீங்கள் வெற்றி பெற்று இருப்பதாக உணர்ந்தால் எங்களுக்கு உடனடியாக அழைப்பு விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
வெற்றி எண்கள்
யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட்டில் பரிசு தொகை வென்ற எண்கள்: 03,12,15,25,43 மற்றும் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் 10 மற்றும் 11 ஆகும்.
SkyNews
யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட்டில் இதுவரை ஒரு சில பிரித்தானியர்கள் மட்டுமே 100 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.