பிரித்தானியாவின் அடுத்த புலம்பெயர்தல் கட்டுப்பாடு: சில மாணவர் விசாக்களுக்கு தடை
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் மேற்கொண்டுவரும் அதிரடி நடவடிக்கைகள் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், சில நாடுகளுக்கு மாணவர் விசா வழங்குவதையும் தடை செய்துள்ளார் ஷபானா!
மாணவர் விசாக்களுக்கு தடை
ஆம், புலம்பெயர்வோர், படிக்க வருவதாகக் கூறிக்கொண்டு பிரித்தானியாவுக்கு வந்து, பிறகு புகலிடம் கோருவதாகவும், விசாக்களை தவறாக பயன்படுத்திக்கொள்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்.

அப்படி படிக்க மற்றும் வேலைக்கு என விசா பெற்று பிரித்தானியாவுக்கு வந்த பலர், பின்னர், மக்கள் வரிப்பணத்தில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான ஹொட்டல்களைச் சென்றடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, பிரித்தானியாவின் பெருந்தன்மையை தவறாக பயன்படுத்த முயலும் நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மாணவர் விசா வழங்குவதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளார் ஷபானா.
ஆப்கானிஸ்தான், கேமரூன், சூடான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே மாணவர் விசா வழங்குவது நிறுத்தப்படுகிறது.
அத்துடன், ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கு திறன்மிகுப் பணியாளர் விசா வழங்கப்படுவதும் நிறுத்தப்படுவதாகவும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |