புகழ்பெற்ற தேவாலய வாசலில் அரை நிர்வாண புகைப்படம் எடுத்த பிரித்தானிய பெண்! பொதுமக்கள் கொந்தளிப்பு
புகைப்படக் கலைஞர், மொடல் மற்றும் உதவியாளர் மூவரும் ஆங்கிலேயர்கள் - இத்தாலி பொலிஸார்.
அரை நிர்வாண புகைப்படம் விளம்பரத்திற்காக அல்ல, பயணத்தை நினைவூட்டுவதற்காக எடுக்கப்பட்டது.
இத்தாலியில் புகழ்பெற்ற தேவாலய வாசலில் பிரித்தானிய பெண் ஒருவர் அரை நிர்வாணமாக புண்ணகைப்படங்கள் எடுத்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர், இத்தாலியில் உள்ள அமல்ஃபி கதீட்ரல் தேவாலயத்தின் படிகளில் அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததது பொது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள்கிழமை காலை இந்தச் சம்பவம் நடந்ததாகவும், தேவாலயத்தின் கதவுகளுக்கு முன்னால், படிகளில் ஒரு பெண் உடம்பில் அரைகுறையாக துணியை சுற்றிக்கொண்டு ஒரு சிவப்பு முக்காடுடன் போஸ் கொடுத்ததை, பொதுமக்களில் ஒருவர் படம் பிடித்து வெளியிட்டார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் திகைத்து ஆத்திரமடைந்தனர்.
Dailymail
அந்த நேரத்தில் மூன்று பேர் இருந்ததாகவும், அவர்கள் போட்டோஷூட் செய்ய எந்த முன் அனுமதியும் பெறவில்லை என்றும், அவர்கள் நகரத்தை விட்டு வெளியேறும்போது பிடிபட்டதாகவும் வீடியோவை வெளியிட்ட உள்ளூர் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
அந்த பெண் முழு ஆடையுடன் தேவாலயத்திற்கு வந்து தனது ஆடைகளை களைந்து படிகளில் ஏற ஆரம்பித்ததை அந்த வீடியோ காட்டுகிறது.
ஒரு ஆண் புகைப்படக் கலைஞர், பெண் மொடல் மற்றும் உதவியாளர் உட்பட மூவரும் ஆங்கிலேயர்கள் என்று அமல்ஃபி பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் இது விளம்பரத்திற்காக அல்ல என்றும், நகரத்திற்கு தங்கள் பயணத்தை நினைவூட்டுவதாகவும் காவல்துறையினரிடம் கூறியதாக அந்த அறிக்கை கூறியது.
அதைத் தொடர்ந்து, மூவர் மீதும் “பொது இடத்தில் ஆபாசமான செயல்கள்” செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பொலிஸார் அவர்களை அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
தேவாலயம் இத்தாலியின் அமல்ஃபி கடற்கரையில் உள்ளது மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது மற்றும் அப்போஸ்தலன் செயின்ட் ஆண்ட்ரூவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது, இதன் கதவுகள் 1067-ல் அமைக்கப்பட்டது. இந்த இடம் அப்போது கான்ஸ்டான்டினோப்பிள் எனப்படும் ரோமானியப் பேரரசின் தலைநகரமாக இருந்தது.
1206- ஆம் ஆண்டு முதல் தேவாலயம் வைக்கப்பட்டுள்ள புனித ஆண்ட்ரூவின் மொசைக்கின் அடியில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.