பிரித்தானியாவில் அதிகரிக்கவுள்ள ரயில் கட்டணம் - எச்சரிக்கும் பொது போக்குவரத்து குழுக்கள்
2026-ல் பிரித்தானியாவில் ரயில் கட்டணம் 5.5% உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டண உயர்வு, அடுத்து வெளியாகவிருக்கும் 2025 ஜூலையின் Retail Price Index (RPI) அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.
RPI 4.5% உயரும் என கணிக்கப்பட்டுள்ளதால், கட்டண உயர்வும் அதனைத் தொடர்ந்து ஏற்படும்.
இந்நிலையில், பொது போக்குவரத்து குழுக்கள் இந்த கட்டண விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே ரயில் பயணம் மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதால், மேலும் கட்டண உயர்வு மக்கள் மீது நிதி சுமையை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர்.
Railfuture மற்றும் Campaign for Better Transport போன்ற அமைப்புகள், இந்த கட்டண உயர்வு மக்கள் ரயில் பயணத்தை தவிர்த்து சாலைகளில் அதிகமாக பயணிக்க செய்யும் என எச்சரித்துள்ளன.
பிரித்தானிய அரசு இது குறித்து அதிகாரப்பூரவ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. ஆனால் Great British Railways (GBR) என்ற புதிய பொது நிறுவனத்தின்மூலம் ரயில் கட்டண அமைப்பை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு உள்ளது.
பிரித்தானிய போக்குவரத்து செயலாளர் Heidi Alexander, ரயில் சேவைகளை நம்பகமான மற்றும் மலிவான போக்குவரத்தாக மாற்றவேண்டும் என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK rail fare hike 2026, train ticket price increase UK, Retail Prices Index UK 2025, Great British Railways GBR, UK public transport cost, rail travel affordability UK