பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய பெண் இறந்தது எப்படி? பிரேத பரிசோதனையில் பகீர் தகவல்
பிரித்தானியாவில் 2 குழந்தைகளுடன் சேர்ந்து கொலை செய்யப்பட்ட கேரள பெண்ணின் இறப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை
அதன்படி அவர் சால்வை அல்லது கயிற்றை கொண்டு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Ketteringல் வியாழன் அன்று அஞ்சு அசோக் (40) மற்றும் அவரின் குழந்தைகளான ஜீவா சாஜு (6), ஜான்வி சாஜு (4) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பில் அஞ்சுவின் கணவரான சாஜு (52) தற்போது பொலிஸ் விசாரணை மற்றும் காவலில் உள்ளார். சாஜு 72 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டு அவர் மீது கொலைக் வழக்கு பதியப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
mathrubhumi
பிள்ளைகளின் உடல்கள்
ஜீவா மற்றும் ஜான்வி உடல்களுக்கு இன்று பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.
வேலை சரியாக அமையாத விரக்தியில் சாஜு இருந்து வந்ததோடு சிறிய விடயங்களுக்கு கூட அதிகம் கோபப்படுவார் என குடும்பத்தார் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.