இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல்
பிரித்தானியாவின் 10 இடங்களில் வாழும் மக்கள் கடுமையான வானிலையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதால் சில விடயங்களை தயாராக வைத்துக்கொள்ளுமாறு வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தியுள்ளது.
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்
செவ்வாயன்று Bram புயலால் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து, மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்று வீசிய நிலையில், ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாலை, விமானம் மற்றும் படகுப் போக்குவரத்தில் தாமதங்கள் ஏற்படலாம் என்றும், பலத்த காற்று காரணமாக மின்சாரம் முதலான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
மேலும், மின்சாரம் தடைபடுதல் முதலான சூழலை எதிர்கொள்ளும் வகையில், டார்ச், பேட்டரிகள் மற்றும் மொபைல் போன் பவர் பேக் ஆகியவற்றையும், பிற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |