விசா கட்டணம் உயர்வு: எவ்வளவு உயர்கிறது?
பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதற்காக, விசா கட்டணம் மற்றும் மருத்துவ கட்டணம் ஆகியவற்றை உயர்த்துவது என முடிவு செய்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
பொலிசாருக்கு 7 சதவிகிதம், சிறப்பு மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் முதலானோருக்கு 6 சதவிகிதம், ஜூனியர் மருத்துவர்களுக்கு 6 சதவிகிதம் ஊதிய உயர்வுடன் 1,250 பவுண்டுகள், சிறை அலுவலர்களுக்கு 7 சதவிகிதம், இராணுவத்தினருக்கு 5 சதவிகிதம் ஊதிய உயர்வுடன் 1,000 பவுண்டுகள், ஆசிரியர்களுக்கு 6.5 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிப்பது என ரிஷி முடிவு செய்துள்ளார்.
Getty images
பிரித்தானிய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதற்காக, விசா மற்றும் மருத்துவ கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக பிரதமர் ரிஷி அறிவித்துள்ளார்.
விசா கட்டணம் எவ்வளவு உயர இருக்கிறது?
விசா கட்டணம் மற்றும் மருத்துவ கட்டணம் எவ்வளவு உயர உள்ளது என்பது குறித்து அரசு தரப்பிலிருந்து இதுவரை உறுதி செய்யப்பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஆனாலும், சுமார் 15 முதல் 20 சதவிகிதம் வரை கட்டண உயர்வு இருக்கலாம் என சில செய்திகள் கூறுகின்றன. பணி விசா கட்டணம் 15 சதவிகிதமும், மற்ற விசா கட்டணங்கள் குறைந்தபட்சம் 20 சதவிகிதமும் உயர இருப்பதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.
மருத்துவக் கட்டணத்தைப் பொருத்தவரை, அது 624 பவுண்டுகளிலிருந்து 1,035 பவுண்டுகளாக உயர இருப்பதாக அதே ஊடகம் தெரிவிக்கிறது
கட்டண உயர்வு எப்போது அமுலுக்கு வருகிறது?
எந்த வகை விசாவுக்கு எவ்வளவு கட்டணம் உயர்கிறது, எப்போது புதிய கட்டண உயர்வு அமுலுக்கு வருகிறது ஆகியவை குறித்த முழு விவரங்கள், பிரித்தானிய உள்துறை அலுவலகத்தால் எதிர்வரும் மாதங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |