ஈரான் போரில் பிரித்தானியா நேரடியாக பங்கேற்காது: பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உறுதி
ஈரான் உடனான போரில் பிரித்தானிய கலந்து கொள்ளாது என்று அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார்.
பிரித்தானியாவின் போர் இல்லை
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இராணுவ நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
நேட்டோ உறுப்பு நாடுகள் இந்த போரில் கலந்து கொள்ள முன்வராத நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேட்டோ உறுப்பு நாடுகள் மீது கடும் கண்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் திங்கட்கிழமை ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் போரில் பிரித்தானியா நேரடியாக ஈடுபடாது என்று அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த இராணுவ நடவடிக்கை அடிப்படையில் பிரித்தானிய போர் அல்ல என்றும், இதில் லண்டன் கலந்து கொள்ள போவதில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதே சமயம் பிராந்தியத்தில் தனது மூலோபாய மற்றும் மனிதாபிமான கடமைகளில் பிரித்தானிய அரசு முழு விழிப்புடன் இருப்பதாக ஸ்டார்மர் தெளிப்படுத்தியுள்ளார்.
வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் பேசிய பிரதமர் ஸ்டார்மர், எதிர்கட்சி தலைவரான கெமி பேடனாக் மற்றும் நைஜல் பரேஜ் ஆகியோரின் நிலைப்பாட்டை கடுமையாக கண்டித்தார்.
அதில், எதிர்கட்சிகள் போருக்கு ஆதரிக்கலாம், ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளில் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் இந்த நிலைப்பாடு அவர்களுக்கு வசதியானதாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |