புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்துவது தொடர்பான வழக்கு: பிரித்தானியாவுக்கு வெற்றி
பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டா நாட்டுக்கு நாடுகடத்துவது தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்றுவந்த வழக்கில் பிரித்தானியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம்
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசு, பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோதப் புலம்பெயர்வோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டா போன்ற ஒரு நாட்டுக்கு நாடுகடத்தி, அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிக்கும் வரை அவர்களை அந்நாட்டில் தங்கவைக்கும் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது.

பின்னர் ஆட்சிக்கு வந்த லேபர் கட்சியின் தலைவரான கெய்ர் ஸ்டார்மர், அந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டார். வழக்கு தொடர்ந்த ருவாண்டா புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் ரத்தானதால் தனக்கு பணம் கிடைக்காது என்பதை அறிந்ததால் ருவாண்டா நாடு ஆத்திரமடைந்தது.
ஆகவே, பிரித்தானியா ஒப்பந்தத்தை மீறி விட்டதாகக் கூறி, 100 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு கோரி, நெதர்லாந்தின் தலைநகரான ஹேக் நகரில் அமைந்துள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
அந்த வழக்கில் தற்போது பிரித்தானியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ஆம், கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியின்போது அந்த திட்டம் தொடர்பான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. லேபர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அது ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இது ஒரு அடிப்படை ‘காமன் சென்ஸ்’ சார்ந்த விடயம். அதில் ஒப்பந்த மீறல் எதுவும் இல்லை என பிரித்தானியா தரப்பு வாதம் முன்வைத்தது.
அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பிரித்தானியா ருவாண்டாவுக்கு இழப்பீடு எதுவும் வழங்கத் தேவையில்லை என தீர்ப்பளித்துவிட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |