பிரித்தானியாவில் அழகிய இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாபம்: அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்
பிரித்தானியாவில் உணவகத்திற்கு வெளியே கார் மோதி இளம்பெண் உயிரிழப்பு.
விபத்தில் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை.
பிரித்தானியாவின் ஓஸ்வெஸ்ட்ரியில் உள்ள கிரில் அவுட்-க்கு வெளியே கார் ஒன்று மோதியதில் 22 வயது இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஷ்ரோப்ஷையரின்( Shropshire) ஓஸ்வெஸ்ட்ரியில் (Oswestry) உள்ள கிரில் அவுட் என்ற உணவகத்திற்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை காலை 2:50 மணியளவில் இரண்டு பாதசாரிகள் மீது கார் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தை தொடர்ந்து அருகில் உள்ள ராயல் ஷ்ரூஸ்பரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட இருவரில், 22 வயதுடைய ரெபேக்கர் ஸ்டீர் என்ற இளம் பெண் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
விபத்திற்குள்ளான இரண்டாவது நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கார் விபத்தினை ஏற்படுத்திய சாரதியை கண்டுபிடிக்கும் முயற்சியில், மேற்கு மெர்சியா காவல்துறை, கொலை மற்றும் கொலை முயற்சி ஆகியவற்றின் சந்தேகத்தின் பேரில் 28 வயதுடைய நபரை கைது செய்துள்ளது.
இது தொடர்பாக துப்பறியும் தலைமை இன்ஸ்பெக்டர் மார்க் பெல்லாமி கூறிய தகவலில், எங்கள் முறையீட்டை பகிர்ந்து கொண்டதற்கும், இந்த கைது செய்யப்பட்டதில் முக்கியமான தகவல்களை முன்வைத்ததற்கும் பொதுமக்களுக்கு நன்றி என தெரிவித்தார்.
[9O6MRO
உயிரிழந்த ரெபேக்கர் ஸ்டீரின் குடும்பத்தார், அவரை "நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் மிகவும் அன்பான, திறமையான மற்றும் கனிவான இதயம் கொண்ட நபர்" என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், அழகான பெண் ரெபேக்காவின் இழப்பால் நாங்கள் அனைவரும் முற்றிலும் சிதைந்துவிட்டோம் என தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பாலம் மீதான தாக்குதலுக்கு உதவியவர்கள் இவர்களா? ரஷ்ய உளவுத்துறை அறிக்கையால் அதிர்ச்சியடைந்த புடின்
மேலும் அவள் எப்போதும் புன்னகை கொண்டிருந்தாள், அது அனைவரையும் நேசிக்க வைத்தது, பல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களால் தற்போது அவள் மிகவும் இழக்கப்படுவாள் என தெரிவித்துள்ளனர்.