பாலம் மீதான தாக்குதலுக்கு உதவியவர்கள் இவர்களா? ரஷ்ய உளவுத்துறை அறிக்கையால் அதிர்ச்சியடைந்த புடின்
கிரிமியா பாலம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைன் தான் பொறுப்பு.
FSB இன் விசாரணை குறித்து ஜனாதிபதி புடினுக்கு புலனாய்வு குழுவின் தலைவர் விளக்கம்.
கிரிமியா பாலத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று கிரிமியன் தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் The Kerch பாலத்தின் மீது கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று நடைபெற்றது, இதில் மூன்று பேர் வரை கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பாலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனின் Zaporizhzhia பகுதியில் குடியிருப்பு வளாகங்கள் மீது ரஷ்ய துருப்புகள் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
Ukraine has just admitted to blowing up the Kerch bridge which connects the Crimea to Russia.
— Lewis Brackpool (@Lewis_Brackpool) October 8, 2022
Zelensky’s advisor Podolyak has said the explosion is just “the beginning”.pic.twitter.com/x8MKZsnwrU
இந்த தாக்குதலில் 17 கொல்லப்பட்டுள்ளதாகவும், டசின் கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி புதைந்து போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவை கிரிமியாவுடன் இணைக்கும் பாலத்தின் மீது நடத்தப்பட்ட “பயங்கரவாத தாக்குதலுக்கு” உக்ரைன் உளவுத்துறை பொறுப்பேற்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மேலும் இது ரஷ்ய கூட்டமைப்பின் முக்கியமான சிவிலியன் உள்கட்டமைப்பை அழிப்பதாக நோக்கம் கொண்ட பயங்கரவாத தாக்குதல் என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தாக்குதலுக்கு ஆசிரியர்கள், குற்றவாளிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் என அனைத்தும் உக்ரைனிய சிறப்பு சேவைகள் தான் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
EPA
நாட்டின் புலனாய்வு குழுவின் தலைவர் அலெக்சாண்டர் பாஸ்ட்ரிகின் உடனான சந்திப்பின் போது, ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்த கருத்துகளை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக FSB இன் விசாரணை குறித்து ஜனாதிபதிக்கு புலனாய்வு குழுவின் தலைவர் அலெக்சாண்டர் பாஸ்ட்ரிகின் விளக்கினார்.
கூடுதல் செய்திகளுக்கு: சிக்ஸர்களே இல்லாமல் சதம் விளாசிய இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்…ரசிகர்கள் உற்சாகம்: வீடியோ காட்சிகள்
அதிகாரப்பூர்வ விசாரணையின் படி, பாலத்தின் மீதான உக்ரைனின் தாக்குதலைத் தயாரிக்க சில ரஷ்ய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் உதவியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.