வெளிநாடு ஒன்றில் கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்: வெளிநாட்டு பெண் கைது!
கம்போடியாவில் பிரித்தானிய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்போடிய தலைநகர் புனோம் பென்னில் பிரித்தானிய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கோண காதலால் துண்டப்பட்ட சம்பவத்தால் இந்த வன்முறை அரங்கேறி இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பிரித்தானியர் 34 வயது ஜெசிகா காரியாட் ஹாப்கின்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஜெசிகா காரியாட் ஹாப்கின்ஸின் உடல் புனோம் பென்னில் நகரில் உள்ள பூங்காவிற்கு படுகாயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
பெண் கைது
இந்த சம்பவத்தில் சனிக்கிழமையன்று 33 வயது வெளிநாட்டு பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம், காமன்வெல்த் ஆகியவை ஆதரவு அளித்து வருவதோடு, இது தொடர்பான விசாரணையிலும் கம்போடிய அதிகாரிகளுடன் நெருங்கி செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |