ஐரோப்பிய அணைய தலைவரின் விமானத்தை குறுக்கிட்ட ரஷ்ய GPS - அசம்பாவிதம் தவிர்ப்பு
ஐரோப்பிய அணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின் விமானம் ரஷ்ய ஜி.பி.எஸ் குறுக்கீட்டால் தாக்கப்பட்டுள்ளது.
இதனால் காகித வரைபடத்தின் அடிப்படையில் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
Plovdiv விமான நிலையத்திற்கு செல்லும் வழியில், விமானம் electronic navigational உதவியை இழந்தது.
இது ரஷ்யா மேற்கொண்ட GPS துண்டிப்பு நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விமானம் ஒரு மணிநேரம் விமான நிலையத்தைச் சுற்றிவந்து, பின்னர் வரைபடத்தின் அடிப்படையில் தரையிறங்கியது.
2022 பிப்ரவரி முதல் இவ்வாறான GPS துண்டிப்பு மற்றும் தவறான சிக்கினால் அனுப்பும் (spoofing) நிகழ்வுகள் அதிகாரித்துள்ளதாக, பல்கேரியா விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது விமானங்கள் மற்றும் தரையில் இருக்கும் அமைப்புகளுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய ஐரோப்பிய ஆணையம், இது ரஷ்யாவின் திட்டமிட்ட தலையீடு என குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் இதை மறுத்துள்ளார்.
அவரது விமானம் இருந்த அதே பகுதியில் மற்ற விமானங்களில் GPS சிக்னலை பெறமுடிந்தது என்பதால், இது வான் டெர் லேயனின் விமனம்மட்டும் இலக்காக இருந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ursula von der Leyen plane GPS, Russian GPS jamming Bulgaria, EU leader flight interference, GPS spoofing Eastern Europe, Kremlin GPS attack suspicion, Plovdiv airport GPS blackout, European Commission security, Russia Ukraine war tactics, NATO GPS disruption threat, Civil aviation GPS risks