பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் 5.1 சதவீதமாக உயர்வு - இளைஞர்கள் கடுமையாக பாதிப்பு
பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் அக்டோபர் வரையிலான மூன்று மாத காலத்தில் 5.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 4.3 சதவீதம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அதிகரித்திருப்பது கவலைக்குரியதாகக் கருதப்படுகிறது.
18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலை இழப்பு 85,000-ஆக அதிகரித்துள்ளது. இது 2022 நவம்பர் மாதத்திற்குப் பிறகு மிகப்பெரிய உயர்வாகும்.
தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) இதனை “இளைஞர்களை அதிகமாக பாதிக்கும் சோர்வான வேலை சந்தை நிலை” என்று தெரிவித்துள்ளது.

பல நிறுவனங்கள், பட்ஜெட் அறிவிப்பு வரும்வரை பணியமர்த்தும் பணிகளை முழுமையாக நிறுத்தவும், தாமதப்படுத்தவும் செய்துள்ளன.
கடந்த ஆண்டின் தேசிய காப்பீட்டு வரி உயர்வு, வேலைக்கு ஆட்களை நியமிப்பதை அதிக செலவாக மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
பணியாளர் எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடும்போது 1,49,000 குறைந்துள்ளது. இதன்மூலம் “இளைஞர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என ONS இயக்குநர் லிஸ் மெக்யூன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசு, 50,000 பயிற்சிகள் மற்றும் 3.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்க 1.5 பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்யும் என அறிவித்துள்ளது.
ஆனால், பல தொழில் நிறுவனங்கள், குறைந்த அனுபவமுள்ள இளைஞர்களை நியமிக்க புதிய குறைந்தபட்ச ஊதிய திட்டம் தடையாக இருக்கும் எனக் கூறுகின்றன.
பிரித்தானியாவின் வேலை இழப்பு விகிதம், கோவிட்-19 காலத்திற்குப் பிறகு மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
வங்கிக் கடன் வட்டி விகிதம் குறைக்கப்படுமா என்ற கேள்வி, இந்த புள்ளிவிவரங்களால் மேலும் தீவிரமாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK unemployment rate 2025 ONS data, Youth unemployment UK October 2025, UK payroll jobs drop 149,000 statistics, Rachel Reeves budget hiring slowdown, UK minimum wage policy impact on youth, James Reed entry-level hiring economics, Hospitality sector Kris Gumbrell statement, UK wage growth 4.6 percent private vs public, Bank of England interest rate decision, Pat McFadden youth apprenticeship plan