4 கி.மீ தூரத்தில் உள்ளவரை துப்பாக்கியால் சுட்டு உலக சாதனை படைத்த உக்ரைன் வீரர்
ரஷ்ய உடனான போரில் உக்ரைன் வீரர் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடைபெற்று வந்தாலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கிழக்கு உக்ரைனின் டொனெஸ்ட்க் பகுதியில் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உக்ரைன் வீரர் உலக சாதனை
இந்த போரில், உக்ரைனின் கோஸ்ட் பிரிவு எனப்படும் ஸ்நைபர் பிரிவை சேர்ந்த வீரர் ஒருவர் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
போக்ரோவ்ஸ்க் நகரில், 13000 அடி தூரத்தில்(சுமார் 4 கிலோ மீட்டர்) உள்ள 2 ரஷ்யா ராணுவ வீரர்களை துப்பாக்கியில் சுட்டுக்கொன்றதன் மூலம், நீண்ட தூரத்தில் உள்ளவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
உக்ரைனில் தயாரிக்கப்பட்ட 14.5 மி.மீ அலிகேட்டர் ஸ்நைபர் என்னும் துப்பாக்கியை வைத்து, UAV மற்றும் AI உதவியுடன் இந்த சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், உக்ரைன் பாதுகாப்பு சேவையை(SBU) சேர்ந்த 58 வயதான வியாசெஸ்லாவ் கோவல்ஸ்கி என்ற வீரர், பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட Horizon Lord என்னும் துப்பாக்கி மூலம், 12,400 அடி தூரத்தில் உள்ள ரஷ்யா வீரரை சுட்டுகொன்றதே சாதனையாக இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |