உக்ரேன் மரியுபோல் நகரத்தில் அழுகிய நிலையில் 200 உடல்கள் கண்டெடுப்பு!
உக்ரைனின் மரியுபோல் நகரத்தில் கட்டிடத்தின் அடித்தளத்தில் இப்போது 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷ்ய போர் நேற்றோடு (மே 24) மூன்று மாதங்கள் நிறைவடைந்தது, ஆனால் இப்போது வரை முடிவுக்கு வரவில்லை. இந்தக் காலக்கட்டத்தில் பல போர்க் குற்றங்கள் மற்றும் கொடுமைகள் நடந்தேறியுள்ளன.
இந்நிலையில், இப்போது உக்ரைன் நகரமான மரியுபோலில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் அடித்தளத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புடினை 2 மாதங்களுக்கு முன்பே கொலை செய்ய முயற்சி நடந்தது! உக்ரைனிய அதிகாரி பரபரப்பு தகவல்
செவ்வாயன்று மரியுபோலில் மற்றொரு திகிலூட்டும் காட்சியை கண்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். நடந்ததை விவரித்த அதிகாரிகள், நகரத்தில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் அடித்தளத்தில் உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில், ஏராளமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம் ரஷ்ய இனப்படுகொலைக்கான மற்றொரு உதாரணம் வெளியாகியுள்ளது என்று கூறினர்.
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலைக் கைப்பற்ற ரஷ்யா நீண்டகாலம் போராடியது. இதன்போது, நகரில் அமைந்துள்ள இரும்பு ஆலையில் அப்பாவி மக்கள் பலர் தஞ்சம் அடைந்து பல நாட்களாக அங்கேயே சிக்கிக் கொண்டனர். அதில் பலர் உயிரிழந்ததாகவும், சிலர் போருக்கு இடையில் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
முன்னதாக, புச்சா நகரில், ரஷ்யா வெகுஜன படுகொலை மற்றும் பொதுமக்களை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இப்போது, மரியுபோலில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.