இந்தியாவுக்கான உக்ரைன் தூதரை திடீரென பணிநீக்கம் செய்த உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, இந்தியா, ஜேர்மனி, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கான உக்ரைன் தூதர்களை திடீரென பணிநீக்கம் செய்துள்ளார்.
எதற்காக அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதற்கான காரணம் எதையும் கூறாமலே, திடீரென இந்த நாடுகளுக்கான உக்ரைன் தூதர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள தூதர்களுக்கு வேறு ஏதேனும் பொறுப்பு கொடுக்கப்படுமா என்பது குறித்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, சர்வதேச நாடுகளின் உதவியையும், இராணுவ உதவியையும் பெற வேகமாக செயல்படுமாறு தனது தூதர்களை ஜெலன்ஸ்கி துரிதப்படுத்திவந்த நிலையில், அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.