315 ரயில் பெட்டிகள்...சிறைப்பிடிக்கப்பட்ட ரஷ்ய, பெலாரஸ் உரங்கள்: உக்ரைன் அதிரடி!
ரஷ்யா மற்றும் பெலாரஸ்க்கு சொந்தமான உரங்களை ஏற்றிக்கொண்டு உக்ரைனுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 315 ரயில் பெட்டிகளை உக்ரைன் அதிகாரிகள் சிறைப்பிடித்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையால், உலக அளவில் தானிய தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் மட்டுமில்லாமல், ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளால் உலக அரங்கில் கடுமையான உரத் தட்டுபாடும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ்க்கு சொந்தமான உரங்களை ஏற்றிக்கொண்டு உக்ரைனுக்குள் சுங்கவிதிகளை மீறி நுழைந்த 315 ரயில் பெட்டிகளை அந்த நாட்டின் அதிகாரிகள் சிறைப்பிடித்துள்ளனர்.
Ukraine arrests 315 railway carriages with #Russian and #Belarusian mineral fertilizers totaling 360 million hryvnias (about $12 million)
— NEXTA (@nexta_tv) July 4, 2022
The Prosecutor-General's Office of #Ukraine reported that the railway carriages entered the country in violation of customs legislation. pic.twitter.com/wPvBd4C0rN
இவற்றில் உக்ரைனிய நாணய மதிப்பில், சுமார் 360 மில்லியன் ஹ்ரிவ்னியாக்களுக்கும், டாலர் மதிப்பில் சொல்லவேண்டும் என்றால் 12 மில்லியன் டாலர் மதிப்புள்ள உரங்கள் அடைக்கப்பட்டு இருந்தாக உக்ரைனிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தானியங்களின் அளவு இவ்வளவா? ஜெலென்ஸ்கி பகீர் தகவல்
இதுத் தொடர்பாக உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ள தகவலில், சுங்கச் சட்டத்தை மீறி ரயில் பெட்டிகள் நாட்டிற்குள் நுழைந்தாக குற்றம் சாட்டியுள்ளனர்.